Wednesday, December 28, 2011

வந்தார் தர்மயுத்தத்தில் வென்றார்!

துடிப்பான பொறியியல் வல்லுனராக மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிந்த திரு. கலைசெல்வன் 1997ல் இந்தியாவில் நடந்த திருமணத்தில் தவறான நபரால் வஞ்சிக்கப்பட்டு இந்திய உச்ச நீதிமன்றத்தால் “அப்பாவிகளுக்கெதிரான சட்ட தீவிரவாதம்” என்று அழைக்கப்படும் பொய் வரதட்சணை வழக்கு மூலம் தாக்கப்பட்டார். துணிவுமிக்க இந்த இளைஞர் அநீதியைக் கண்டு அஞ்சி நடுங்காமல் இந்த வன்முறையை எதிர்த்து போராட கொஞ்சமும் தயங்காமல் இந்தியாவிற்கு வந்தார்.


இந்தியாவிற்கு வந்து நேரில் பார்த்தபோதுதான் இந்திய மண்ணில் காவல்- நீதித்துறைகளின் துணையோடு இந்த பொய் வரதட்சணை வழக்கு அராஜகம் அப்பாவிகளுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள உண்மை நிலையை உணர்ந்து தமிழ்நாட்டில் இதுபோன்று இன்னலுறும் அப்பாவிகளை காக்க இந்தியக் குடும்ப பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பு உருவாக உறுதுணையாகயும், அடித்தளமாகவும் செயல்பட்டு தனக்கெதிரான அநீதியை எதிர்த்து போராடும் அதே வேளையில் பொய் வழக்கில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்த பல ஆயிரக்கணக்கான அப்பாவிகளுக்கு வழிகாட்டியாகவும் செயல்பட்டார்.







1998 முதல் அவருக்கெதிராக காவல் மற்றும் நீதித்துறையின் ஒத்துழைப்போடு நடந்த “சட்ட தீவிரவாதத்தை” கொஞ்சமும் தளராமல் எதிர்த்து போராடிய இவருக்கு இன்று எல்லாவித பொய் வழக்குகளிலிருந்தும் விடுதலை கிடைத்து விட்டது.

498அ X தர்மயுத்தத்திற்கு முன்னோடியாக இவரது வெற்றி அனைவருக்கும் ஒரு நல்ல விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் என்று வாழ்த்துவோம்.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் மீண்டும் தர்மம் மட்டுமே வெல்லும்!!

Sunday, November 20, 2011

இந்தியக் குடும்பங்களை காக்கக் கிளம்பிய இளைஞர் படை

இந்தியாவில் பெண்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட சட்டங்களைப் பயன்படுத்தி குடும்பங்களை பிரித்து அழிக்கும் பணி செம்மையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் பல அப்பாவிக் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிட்டிருக்கிறது.

இந்தியக் குடும்பங்கள் இப்படி அழிவுப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதை தடுத்து குடும்பங்களைக் காத்து குழந்தைகளின் எதிர்காலத்தை ஒளிமயமாக்க இந்தியக் குடும்ப பாதுகாப்பு இயக்கம் உருவாகி செயல்பட்டு வருகிறது. அதன் சகோரக் கழகமான அகில இந்திய ஆண்கள் நலச் சங்கம் உலக ஆண்கள் தினத்தை இந்திய குடும்ப பாதுகாப்பு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் தினமாக அனுசரித்து பெண்கள் பாதுகாப்பு என்ற பெயரில் ஒருதலைபட்சமாக சட்டங்களை இயற்றி ஆண்களை துன்புறுத்தி குடும்பங்களை சிதைக்கும் அநீதிக்கெதிரான விழிப்புணர்ச்சி பிரசாரத்தை நேற்று சென்னையில் நடத்தினார்கள்.

சென்னை : "பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள், ஆண்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுவதால், குடும்ப அமைப்பு சிதையும் அபாயம் உள்ளது' என, அகில இந்திய ஆண்கள் நலச் சங்க, சென்னை கிளை அமைப்பாளர் பிரான்சிஸ் கூறினார்.

உலக ஆண்கள் தினத்தையொட்டி, நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கணவன் - மனைவி, மாமியார் - மருமகள் ஆகியோருக்கிடையே எழும் சிறிய பிரச்னைகளுக்கும், வரதட்சணை தடுப்பு சட்டத்தின் கீழ், பெண்கள், தமது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பொய் வழக்கு தொடர்கின்றனர். குடும்ப வன்முறை, விவாகரத்து, குழந்தை காப்புரிமை, ஜீவனாம்சம், கள்ளத்தொடர்பு, தற்கொலை ஆகியவை குறித்த சட்டங்களைக் கொண்டு, பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதை விட, இவற்றை ஆண்களுக்கு எதிராக, தவறாக பயன்படுத்துகின்றனர். இதனால், நம் பாரம்பரிய சிறப்புகளில் ஒன்றான குடும்ப அமைப்பு முறை சிதையும் அபாயம் உள்ளது. எனவே, ஆண், பெண் பாகுபாடின்றி, இருவரையும் சமமாக கருதும்படி, சட்டங்கள் திருத்தப்பட வேண்டும். இவ்வாறு பிரான்சிஸ் கூறினார்.இந்திய குடும்ப பாதுகாப்பு இயக்கத்தின், சென்னை கிளை அமைப்பாளர் கலைச்செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Wednesday, August 31, 2011

498அ-தர்மயுத்தத்தில் இதுவும் ஒரு வகை

தர்ம சாத்திரம்

ஆயுள், பொருள், வீட்டுத் தகராறு, மந்திரம், உடலுறவு, மருந்து, வருமானம், தானம், அவமானம் இந்த ஒன்பதும் பிறருக்குத் தெரியக்கூடாது.

தர்ம சாத்திரத்தில் எவையெல்லாம் பிறருக்குத் தெரியக்கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறதோ அவையெல்லாம் இன்று இந்தியக் குடும்பங்களில் ஊரறிய காவல் நிலையங்களிலும், நீதிமன்றங்களிலும், செய்தித்தாள்களிலும் பொய் வழக்குப்போடும் மனைவியரால் பிரகடனப்படுத்தப்படுகிறது.


மகாபாரதத்தில் பாண்டவர்களின் வளமான வாழ்வைக் கண்டு பொறாமை அடைந்த துரியோதனன் பாண்டவர்களை தந்திரமாக வெல்லவேண்டும் என்று யோசித்துக்கொண்டிருக்கிறான். அப்போது சகுனி பாண்டவர்களை வெல்ல சூதாட்டம்தான் சிறந்த வழி என்று ஆலோசனை தருகிறான்.

இந்த தருணத்தில் விதுரர் கூறிய அறிவுரை என்னவென்றால் -“ துரியோதனா உனக்கு பாண்டவர்களின் சொத்துக்கள் வேண்டுமென்றால் நேரடியாக அவர்களிடம் கேட்டுப் பெற்றுக்கொள். அவர்கள் தாராளமாக உனக்குத் தந்துவிடுவார்கள். ஆனால் அண்ணன் தம்பி உறவு முறையுள்ள உங்களுக்கிடையே இருக்கும் இந்த குடும்பப் பிரச்சனைக்கு சகுனி போன்ற வெளியாட்களிடம் ஆலோசனை பெறுவதோ அல்லது உங்களது பிரச்சனையில் வெளியாட்களை அனுமதிப்பதோ மிகுந்த பேரழிவை ஏற்படுத்திவிடும்” என்று விதுரர் துரியோதனனுக்கு அறிவுரை கூறினார்.

அதைக் கேட்காத துரியோதனன் சகுனியின் ஆலோசனைப்படி தவறான வழியில் இறங்கி கடைசியில் தனது ஒட்டுமொத்தக் குடும்பத்தையே இழந்தான்.

அதுபோலத்தான் இப்போது மனைவியர் தனக்கும் கணவனுக்கும் இருக்கும் வேற்றுமைகளை தகுந்த வழியில் பேசித் தீர்த்துக்கொள்ளாமல் வழக்கறிஞர், காவல்துறை, நீதிமன்றம் என்ற வெளியாட்களை குடும்பப் பிரச்சனைக்குள் நுழைய விடுவதால் பொய் வரதட்சணை வழக்குகள் உருவாகி கடைசியில் அந்தக் குடும்பத்தின் தலைமுறையே நாசமாகிறது.

மகாபாரதத்தில் சகுனி நுழைந்து பேரழிவை ஏற்படுத்தியது போல இன்றும் கணவன், மனைவிக்கிடையே ஏற்படும் குடும்பப் பிரச்சனையில் காவல்-நீதித்துறைகள் தலையீடு செய்து பொய் வரதட்சணை வழக்குகளை ஊக்குவித்து பல குடும்பங்களை அழித்திருக்கிறது.

பொதுவாக பொய் வரதட்சணை வழக்கு பதிவு செய்யப்பட்டவுடன் கணவன் அவனது குடும்பத்துடன் சேர்த்து உடனடியாக கைது செய்யப்படுவான். இதுபோன்ற வழக்குகளுக்கு கணவனை கைது செய்ய எந்தவித ஆதாரமும் தேவையில்லை என்று இந்திய வரதட்சணை சட்டம் அப்பாவிகளை துன்புறுத்த வழிவகை செய்திருக்கிறது.

அப்படியே இந்த கைது அராஜக நடவடிக்கையைப் பொறுத்துக்கொண்டு நீதிமன்றத்தில் போராடி நீதி பெறலாம் என்றால் இந்திய நீதிமன்றங்களில் நீதிக்காக சராசரியாக 10 - 15 ஆண்டுகள் காத்திருக்கவேண்டும். இந்த காலகட்டத்திற்குள் கணவன் தனது வேலையை இழந்து, பெற்றோரை இழந்து, சுற்றத்தை இழந்து எல்லாவற்றிற்கும் மேலாக தனது வாழ்நாளில் பெரும்பகுதியையே இழந்துவிடுவான். அதற்குப் பிறகு நீதி கிடைத்தால் என்ன? கிடைக்காவிட்டால் என்ன?

பொய் வழக்கில் சிக்குபவருக்கு இருக்கும் மனவேதனையை “சுறா” என்ற படத்தில் காட்டியிருக்கிறார்கள்.

திரைப்படத்தில் காட்டியிருப்பது நிஜ வாழ்க்கையில் நடந்தால் அதன் வலி எப்படி இருக்கும் என்று பலருக்கும் தெரியாது. பலகாலம் இதுபோன்ற கொடுமைகளை அனுபவித்துவிட்ட இந்திய இளைஞர்கூட்டம் தாங்களாகவே நீதியைத் தேடிக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள் என்பதைக் காட்டும்விதமாக வந்துள்ள செய்தி கீழே தரப்பட்டுள்ளது.

Engineer kills wife, three others, self
Indo-Asian News Service, Updated: August 29, 2011


Jaipur: A 32-year-old engineer on Sunday gunned down his wife and three relatives at his in-laws' house before shooting himself dead two hours later in Rajasthan's Tonk district, police said.

Pradeep Jain, armed with two pistols and a knife, barged into his in-laws' house around 9.30 am in Devali town of the district, some 100 km from state capital Jaipur.

"He shot dead his wife Suman, two brothers-in-laws, Sanjay and Lokesh, and Lokesh's wife Ankita," said a police officer.

After the shooting spree at his in-laws' home, Pradeep went to his sister's house about 500 metre away and addressed a huge crowd and media persons for two hours from the balcony.



He alleged that he had been harassed and false criminal cases (IPC498A, 406) had been slapped on him by his wife and in-laws which had forced him to commit the crime. He said he had filed for divorce and wanted the custody of his four-year-old son.

"He remained on the balcony for two hours before shooting himself on the forehead," the officer said.

"Pradeep worked as an engineer with a fertilizer firm in Kota," he said.

At his sister's house, about 2,000 people gathered to see him. Police tried to arrest him, but he kept flaunting his gun.

Read more at: http://www.ndtv.com/article/cities/engi ... -129704&cp

Tuesday, August 9, 2011

சுயஉணர்வு இழந்துவிட்ட இந்தியர்கள் உயிர்த்தெழவேண்டிய நாள்

ஆகஸ்ட் 8 - வெள்ளையனே வெளியேறு இயக்கம் தோன்றிய நாள். அகிம்சையில் ஆரம்பித்த இயக்கம் பின் வன்முறையாக வெடித்து வெள்ளையர்களை விரட்டியடித்ததாக இந்திய வரலாறு கூறுகிறது.

அதுபோலவே இப்போது நாட்டையும், தவறான சட்டங்கள் மூலம் குடும்பங்களையும் சீரழிக்கும் ஊழல்வாதிகளுக்கு எதிராக தொடங்கப்பட்டிருக்கும் மக்கள் விழிப்புணர்வு இயக்கம் தீவிரமடைந்து வெடிப்பதற்கு முன்பாக ஊழல்வாதிகள் நாட்டைவிட்டு ஓடிவிடுவது நல்லது என்பதைத்தான் இந்திய வரலாறு “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தின் மூலம் காட்டுகிறதோ?

“செய் அல்லது செத்து மடி” என்ற காந்தியக் கோட்பாட்டிற்கு மக்கள் மாறுவதற்கு முன்பாக அரசியல்வாதிகள் தங்களை நல்வழிப்படுத்தி திருத்திக் கொள்ளவேண்டும் என்பதைக் காட்டும் விதமாக சென்னையில் நடந்த பேரணியின் ஒரு பகுதியை வீடியோவில் காணலாம்.




வெள்ளையனே வெளியேறு தினம்
ஆகஸ்ட் 09,2011 தினமலர்

இந்தியா சுதந்திரம் பெற காரணமாக அமைந்த போரட்டங்களுள் மிக முக்கியமானது "வெள்ளையனே வெளியேறு' போராட்டம். இதில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதன் 68வது நினைவு தினம் இன்று (ஆக., 9ம் தேதி) அனுசரிக்கப்படுகிறது.

உடனடி விடுதலை: மகாத்மா காந்தி துவக்கிய "ஒத்துழையாமை இயக்கத்தை' பல தலைவர்கள் ஏற்க மறுத்தனர். இதன் பின் ஒரு மாதம் கழித்து, 1942 ஆக., 8ம் தேதி, மும்பையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் "வெள்ளையனே வெளியேறு' என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் பேசிய மகாத்மா காந்தி "செய் அல்லது செத்துமடி' என்ற கோஷத்துடன் இப்போராட்டத்தை துவக்கி வைத்தார்.

மறுநாள் ஆக., 9ம் தேதி, காந்தி, நேரு உள்ளிட்ட அனைத்து காங்கிரஸ் தலைவர்களையும் ஆங்கிலேயர் சிறை பிடித்தனர். இதனையடுத்து இப்போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்தது.

இளைஞர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அறவழியில் துவங்கிய இப்போராட்டம் வன்முறையாக மாறியது. இது ஆங்கிலேயர்கள் மனதில், இனிமேலும் இந்தியாவை நாம் ஆள முடியாது என்று உணர வைத்தது. இதன் பின் ஐந்து ஆண்டுகள் கழித்து இதே ஆக., மாதம் தான் இந்தியா சுதந்திர காற்றை சுவாசித்தது.

Monday, August 1, 2011

தர்மத்தின் வழி சென்றால் நீதி கிடைக்குமா?

இந்திய சட்டங்கள் சமூக விரோதிகளால் தவறாகப் பயன்படுத்தப்பட்டு அப்பாவிகளை துன்புறுத்தும் ஆயுதமாக பயன்படுத்தப்படும்போது நிரபராதிகளை பாதுகாக்கவேண்டிய தலையாய கடமை காவல்துறைக்கும், அதனைக் கண்காணிக்க வேண்டிய கடமை நீதித்துறைக்கும் இருக்கிறது.

கடவுளை நம்பாதவர்கள்கூட காவல்துறையை நம்புகிறார்கள், நீதிமன்றங்களை நீதி கிடைக்கும் கோயிலாக நம்பி மதித்து வருகிறார்கள். ஆனால் இந்தியசட்ட தீவிரவாதம் (Legal Terrorism) என்று உச்ச நீதிமன்றத்தால் பெயரிடப்பட்டு இப்போது நாடு முழுதும் புற்றுநோய் போல பரவியிருக்கும் பொய் வரதட்சணை வழக்குகள் இந்த நம்பிக்கைகளை முற்றிலுமாக தகர்த்தெறிந்துவிட்டன.

அப்பாவிகளுக்கெதிராக தவறான நோக்கில் ஒருவர் பொய்யான வரதட்சணைப் புகார் கொடுக்கும்போது அதனை பதிவு செய்யும் காவல்துறை முறையாக புலன்விசாரணை செய்து குற்றத்திற்கான சரியான ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே நீதிமன்றத்தில் வழக்கை நடத்துவதற்கான முகாந்திரம் இருக்கிறது என்று அறிக்கை தயார் செய்து வழக்கை நீதிமன்றத்திற்கு அனுப்பவேண்டும். ஆனால் நடைமுறையில் இருக்கும் வழக்கமோ வேறுவிதமாக இருக்கிறது.

பொய் வரதட்சணைப் புகார் பதிவு செய்யப்பட்டவுடன் எந்தவிதமான புலன் விசாரணையும் செய்யாமல் கண்ணை மூடிக்கொண்டு அந்தப் புகாரை அப்படியே நகலாக்கி அதனையே இறுதி விசாரணை அறிக்கையாக நீதிமன்றத்திற்கு அனுப்பும் வழக்கம் பல காலமாக காவல்துறையில் இருந்துவருகிறது.

Delhi High Court

(Savitri Devi Vs. Ramesh Chand, CRL. R 462/2002, Dt:19 May 2003)

Once a complaint is lodged under Sections 498AIPC whether there are exaggerated allegations or there is no evidence, it comes as an easy tool in the hands of Police and agencies like Crime Against Women Cell to hound them with the threat of arrest making them run here and there … … … …Thousands of such complaints and cases are pending and are being lodged day in and day out

வரதட்சணை வழக்குகளைப் பொறுத்தவரை புலன் விசாரணை என்பது ஒரு மறக்கப்பட்ட நடைமுறை. இதன்விளைவாகப் பல அப்பாவிகள் குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான பொய் வரதட்சணை வழக்குகள் குப்பையைப்போல காவல்துறையால் தினம் தினம் இந்திய நீதிமன்றங்களில் கொட்டப்படுகிறது என்று டில்லி உயர்நீதிமன்றம் தெளிவாகக் கூறியிருக்கிறது.

குற்ற வழக்குகளில் புலன்விசாரணை மூலம் உண்மையை அறிந்துகொள்ளாமல் தங்களிடம் சிக்கும் அப்பாவிகளை குற்றவாளி என சித்தரித்து பொய் வழக்குகளை நீதிமன்றத்தில் கொட்டி அப்பாவிகளை துன்புறுத்தும் வழக்கம் காவல்துறைக்கு புதிதான விஷயமல்ல. இந்திய சுதந்திரத்திற்கு முன்பான காலத்திலேயே புலன்விசாரணையில் கடமைதவறும் நடைமுறை காவல்துறையில் இருந்து வந்திருக்கிறது.

இந்திய சட்ட வரலாற்றை சற்றுக் கூர்ந்து நோக்கினால் இந்த உண்மை புலப்படும். ஒருவர் மீது குற்றப் புகார் பதிவு செய்யப்படும்போது சரியான புலன் விசாரணை செய்து குற்றம் சாட்டப்பட்டவர் உண்மையாகவே குற்றம் புரிந்தாரா அல்லது புகார்தாரர் காழ்ப்புணர்ச்சி காரணமாக சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி பொய்யான புகார் அளித்துள்ளாரா என்பதை முறையாக விசாரணை செய்து உறுதிப்படுத்தாமல் கடமையை மறந்து அதிகாரம் தன்னிடம் இருக்கிறது என்ற எண்ணத்தில் மிகவும் வசதியாக மரத்தடி நிழலில் அமர்ந்துகொண்டு குற்றம்சாட்டப்பட்டுள்ள ஏழையின் கண்களில் மிளகாய்பொடியைத் தூவி துன்புறுத்தி குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்து நீதிபதியின் முன் குற்றவாளியாக நிறுத்தும் கொடிய வழக்கம் பலநூற்றாண்டுகளுக்கே முன்பே இந்தியாவில் இருந்திருக்கிறது. இந்த இந்திய சட்டநடைமுறையைப் பற்றி ஆங்கிலேய நீதிபதி தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

A History of the Criminal Law of England

1883. Vol.1: Page 442, MacMillan & Co. London

Author: Sir James Fitzjames Stephen, A Judge of the High Court of Justice, Queen’s Bench Division

During the discussions which took place on the Indian Code of Criminal Procedure in 1872 some observations were made on the reasons which occasionally lead native police officers to apply torture to prisoners. An experienced civil officer observed, “There is a great deal of laziness in it. It is far pleasanter to sit comfortably in the shade rubbing red pepper into a poor devil's eyes than to go about in the sun hunting up evidence." This was a new view to me, but I have no doubt of its truth.

இதுபோன்ற அநீதி இப்போதும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. அது எப்படி நடந்துகொண்டிருக்கிறது என்பதற்கு ஒரு வீடியோ செய்தி இதோ.



முன்னாள் தமிழக காவல்துறைத் தலைவரே தான் தலைவராக பணியாற்றிய காவல்துறையில் அப்பாவிகளுக்கு இதுபோன்று இழைக்கப்டும் அநீதியை நேரில் பார்த்து அந்த வேதனையான அனுபவத்தை தமிழக காவல்துறையின் மாத இதழில் தான் எழுதியுள்ள கட்டுரையில் விவரித்திருக்கிறார்.


காவல் நிலையத்தில் பதிவாகும் குற்றவழக்குகளில் கடமை உணர்வுடன் சரியான புலன்விசாரணை செய்து ஆதாரங்களை திரட்டி வழக்கின் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ளாமல் தங்களிடம் வருகின்ற எல்லாப் புகார்களுக்கும் விசாரணையை முடித்து வழக்கை நீதிமன்றத்திற்கு அனுப்பிவிட்டதாகக் காட்டி தங்கள் கடனை கழித்துக் கொள்வதற்காக கையில் கிடைத்த ஒரு அப்பாவி ஏழைத் தொழிலாளியை பலியாடு போல பயன்படுத்தி அவரை குற்றவாளியாக சித்தரித்து 54 முறை சிறையில் தள்ளியிருக்கிறார்கள் என்று தமிழக காவல்துறைத் தலைவர் எழுதியிருக்கிறார். பதவியிலிருந்து ஓப்வு பெற்ற பிறகு அவரால் இந்தக்கொடுமையைப் பற்றி எழுதத்தான் முடிந்தது. தான் பதவியிலிருந்தபோதே அந்த அப்பாவிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பதில் சொல்ல முடியவில்லையே! இது சட்டத்தின் குற்றமா? அல்லது சட்டத்தை செயல்படுத்துபவர்களின் குற்றமா?

Tamilnadu Police Department

Criminal Investigation Department Review, 2007: Issue: IV

Criminal Justice System Precept and Practice

Tr. A.X.Alexander, IPS., (Retd. DGP)

There was a burglary in 1997 … … … within three hours the thief was apprehended and the property was recovered. He was sent to the prison and subsequently detained under Act 14 of 1982. He had 54 convictions.

... ... ...After the release, the thief and his wife came to see us and I asked him why he had committed thefts so many times. He replied that he was an assistant in masonry work and that he had committed petty felonies only and not definitely the cases shown in his conviction records and the police had taken him whenever they could not fix an accused.

I perused his conviction records and most of the offenses for which he was punished were motorcycle thefts. From his looks I could guess that he did not know even to start a motorcycle. I confronted him why he had committed thefts of motorcycles. He replied that he had not committed theft of any motorcycle but whenever motorcycles were recovered in series he was fixed as the thief. I sent for the Inspector who booked him, to know from him whether the allegation of the thief was true. The Inspector stood in silence for long and muttered that it was true and I told him that he has children and wished that he sinned no more... ... ....


இதுபோன்று அப்பாவிகளுக்கு இந்தியாவில் பலகாலமாக இழைக்கப்பட்டுவரும் அநீதியைக் கண்ட மேலை நாடுகள் புகார் பொய்யாக இருந்தாலும் எந்தவித ஆதாரமுமின்றி அப்பாவிகளை கைதுசெய்யும் நடைமுறை இந்தியாவில் இருப்பதாக இந்தியாவிற்கு செல்ல நினைக்கும் தங்களது குடிமக்களை எச்சரிக்கை செய்துவருகின்றன!

The University of California Education Abroad Program

International Students’ Handbook

Country: INDIA

(Source: http://eap.ucop.edu/our_programs/countries/india/)

“Since the police may arrest anyone who is accused of committing a crime (even if the allegation is frivolous in nature), the Indian criminal justice system is often used to escalate personal disagreements into criminal charges. This practice has been increasingly exploited by dissatisfied business partners, contractors, estranged spouses, or other persons with whom the U.S. citizen has a disagreement, occasionally resulting in the jailing of U.S. citizens pending resolution of their disputes

குற்ற வழக்குகளில் நிரபராதிகளை சிக்கவைத்து துன்புறுத்தும் கொடுஞ்செயல் இப்போது சர்வ சாதாரணமாக பொய் வரதட்சணை வழக்குகளில் மிகவும் அதிகமாக நடந்துகொண்டிருக்கிறது. ஏனென்றால் வரதட்சணை தடுப்புச் சட்டங்களை தவறாகப் பயன்படுத்தும் குற்றவாளிகளுக்குத் துணையாக பொய் வழக்குகளை உருவாக்கி அப்பாவிகளை துன்புறுத்தினால் அதிக பணம் கிடைக்கிறதாம்! மேலும் பொய் வரதட்சணை வழக்குகள் என்பது இந்தியாவில் பலருக்கும் லாபம் தரும் தொழிலாக இருப்பதாக டில்லி உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது.

IN THE HIGH COURT OF DELHI AT NEW DELHI

Date of Order: August 06, 2010

Crl. M.C. 722 of 2009

Amit Sharma ...Petitioner Versus State & Ors. ...Respondents

4. It is surprising that such FIRs are registered by the police when neither complainant lives in Delhi nor the accused persons live in Delhi nor any part of alleged offence had taken place in Delhi. … … … I consider that registration of this FIR is a sordid story of working culture of Delhi police. It is this police which refuses to register FIRs in case of robberies, thefts and other heinous offences which take place on the roads of Delhi and when the complainant dare comes to police station for registration of FIR, he is made to run from one police station to another on the issue of jurisdiction itself, while the FIRs are registered when nothing happened in India and no investigation can be done by the police in India. Why such FIRs are registered is obvious. It seems registration of FIRs has been made a profitable business by some police officials.

பொய் வரதட்சணை வழக்குகள் லாபம் தரும் தொழிலாக இருப்பதால் கடமையை மறந்து நிரபராதிகளை பொய் வரதட்சணை குற்றவழக்குகளில் குற்றவாளியாக சித்தரித்து நீதிமன்றங்களுக்கு குற்ற அறிக்கை அனுப்பும் பல சம்பவங்கள் இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இதனால் கடைசியில் ஏழை எளிய அப்பாவி நிரபராதிகள்தான் பாதிக்கப்படுகிறார்கள். இதுபோன்ற மனித உரிமை மீறல்கள் நடக்காமல் இருக்கவேண்டுமென்றால் காவல் தனது கடமை தவறினாலும் நீதித்துறை தலைநிமிர்ந்து நின்று அப்பாவிகளைக் காக்கவேண்டும்.
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு.

என்ற திருவள்ளுவரின் கூற்றையே இப்போது பொய்வரதட்சணை வழக்குகள் பொய்யாக்கிவிட்டன. தீயினால் சுட்ட வடுவும் மறைந்துவிடும், நாவிலிருந்து வந்த கடுஞ்சொற்களால் ஏற்பட்ட வேதனைகள் கூட மறைந்துவிடும். ஆனால் நிரபராதியை பொய் வழக்கில் குற்றவாளியாக சிக்கவைத்து நீதிமன்றத்தில் அலையவிட்டு கடைசியில் நிரபராதி என்று விடுதலை செய்தாலும் அந்த நிரபராதி அடைந்த இன்னல்கள் என்றுமே ஆறாத ரணமாகத்தான் இருக்கும். அப்பாவிகளின் இந்த வேதனையை யாராலும் துடைக்க முடியாது என்று இந்திய உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ஒரு பொய் வரதட்சணை வழக்கில் அளித்த தீர்ப்பில் ஒழுங்கற்ற புலன் விசாரணை மூலம் நிரபராதிகளுக்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டு வேதனைப் பட்டிருக்கிறது.

Supreme Court of India

Preeti Gupta & Another Vs. State of Jharkhand & Another,

Crl. Appeal No. 1512/2010, Dt: 23 August 2010

The criminal trials lead to immense sufferings for all concerned. Even ultimate acquittal in the trial may also not be able to wipe out the deep scars of suffering of ignominy. Unfortunately a large number of these complaints have not only flooded the courts but also have led to enormous social unrest affecting peace, harmony and happiness of the society..

அதனால் பொய் வரதட்சணை வழக்குகள் எந்தவித விசாரணையுமின்றி காவல்துறையால் குப்பைகளாக நீதிமன்றத்தில் கொட்டப்படும்போது நிரபராதிகளை தேவையற்ற குற்ற வழக்குகளில் சிக்கவைத்து துன்புறுத்தாமல் பாதுகாக்க நீதிமன்றங்களால் மட்டும்தான் முடியும். மனமிருந்தால் மார்க்கமுண்டு! காவலுக்கும், நீதிக்கும் மனசாட்சியிருந்தால் மட்டுமே அப்பாவிகளுக்கும் நீதியுண்டு!!

Saturday, July 9, 2011

இந்தியாவில் பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி உருவாக்கப்படுகின்றன?

இந்தியாவில் பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி உருவாக்கப்படுகின்றன என்ற உண்மையை டெல்லி உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் விளக்கமாக கூறியிருக்கிறது. அது எந்த அளவிற்கு உண்மை என்பதை இந்திய உச்ச நீதிமன்றமும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. சமீபத்திய நாளிதழ் செய்திகளும் அதை உண்மை என்று நிரூபித்திருக்கின்றன. தொடர்ந்து படியுங்கள்………………

தினம் தினம் இந்திய நகர வீதிகளில் நடந்துகொண்டிருக்கும் பல கொடிய குற்றங்களில் பாதிக்கப்படுபவர்கள் தங்களுக்கு நீதி வேண்டி காவல்நிலையத்திற்கு வந்து புகார் கொடுக்கவந்தால் குற்றச்சம்பவம் நடந்தது தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்டு வரவில்லை அது வேறு காவல்நிலைய எல்லைக்குள் வருகிறது என்று கூறி புகாரை பதிவு செய்யாமல் எல்லைப் பிரச்சனையைக் (Jurisdiction) காரணம் காட்டி அலைக்கழிக்கப்படுகிறார்கள்.

ஆனால் பொய் வரதட்சணை வழக்குகள் என்று வரும்போது இந்திய நாட்டிற்குள் இல்லாமல் எல்லை கடந்து வேறு நாட்டில் குற்றம் நடந்ததாக புகார்தாரர் கூறினாலும் எந்தவித எல்லைப் பிரச்சனைப் பற்றியோ, தங்களது அதிகார வரம்பு பற்றியோ கொஞ்சமும் யோசிக்காமல் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சுறுசுறுப்பாக குற்றப்பத்திரிக்கையும் தயார் செய்துவிடுகிறார்கள் என்று டெல்லி உயர்நீதிமன்றம் வருத்தப்பட்டிருக்கிறது.

இதுபோன்ற பொய் வழக்குகளில் குற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்படுபவர், புகார் கொடுப்பவர், குற்றச் சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் இடம் இந்த மூன்றுமே இந்திய மண்ணிற்குள் இல்லாதபோது இதுபோன்ற வழக்குகளை இந்தியாவில் உள்ள காவல்துறை அதிகாரி எப்படி புலன்விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்கிறார் என்பது உலக மகா அதிசயம் என்று டில்லி உயர்நீதிமன்றமே ஆச்சரியப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்திற்கே புரியாத இந்த அதிசயம் பொய் வழக்குகளில் சிக்கித் தவிக்கும் சராசரி இந்தியக் குடிமக்களுக்கு எப்படிப் புரியும்? இந்த ஆச்சரியம் இன்றும் தினந்தோறும் இந்தியாவில் பல பொய் வரதட்சணை வழக்குகளில் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

இந்த உண்மையை டெல்லி உயர்நீதிமன்றம் ஒரு பொய்வரதட்சணை வழக்கிற்கான முதல் தகவல் அறிக்கையை கசக்சி எறிந்து (FIR Quash) கூறிய தீர்ப்பில் வெளியிட்டுள்ளது. அந்த உண்மையின் ஒரு பகுதியைப் பாருங்கள்………

IN THE HIGH COURT OF DELHI AT NEW DELHI

August 06, 2010; Crl. M.C. 722 of 2009

Amit Sharma ...Petitioner Versus State & Ors. ...Respondents

JUSTICE SHIV NARAYAN DHINGRA

1. The present petition under Section 482 Cr.P.C read with Article 227 of the Constitution of India has been preferred by the petitioner for quashing of FIR No.170 dated 15th August, 2008 registered at Police Station Kirti Nagar, West Delhi District, New Delhi.

2. The present FIR was registered at the behest of Smt. Kavita Gupta who a resident of USA and had come to Delhi perhaps only for registration of this FIR. A perusal of FIR reveals that Smt. Kavita Gupta was living in USA since 1993...

3. ... ... ... ... The case is being prosecuted by her father as her attorney. A perusal of this FIR would show that immediately after marriage, the parties moved to USA and thereafter all events as alleged by her are of USA. Even the allegations of her Istridhan being taken away by her father in law and mother in law is of USA and not of India. Allegations of cruelties and the attitude of her husband towards her are all of USA. It is not stated by her that she ever stayed with her in laws or husband from the time of marriage till filing of this complaint at Delhi. When the counsel for State was asked how this FIR was registered in Delhi, the response of the State counsel as given in the form of brief synopsis is that while in India, the complainant and accused cohabited at Delhi at Kirti Nagar, which is the matrimonial house of complainant and therefore there was jurisdiction of Delhi court. A perusal of FIR would show that nowhere the complainant had stated that cohabitation had ever taken place between the parties at Delhi or the parties ever lived at Delhi.

4. It is surprising that such FIRs are registered by the police when neither complainant lives in Delhi nor the accused persons live in Delhi nor any part of alleged offence had taken place in Delhi. The alleged offence admittedly had taken place in USA. All the accused persons, as mentioned by the complainant, are living in USA. The complainant herself is living in USA and the father of complainant perhaps is living in Delhi and pursuing this complaint. I consider that registration of this FIR is a sordid story of working culture of Delhi police. It is this police which refuses to register FIRs in case of robberies, thefts and other heinous offences which take place on the roads of Delhi and when the complainant dare comes to police station for registration of FIR, he is made to run from one police station to another on the issue of jurisdiction itself, while the FIRs are registered when nothing happened in India and no investigation can be done by the police in India. Why such FIRs are registered is obvious. It seems registration of FIRs has been made a profitable business by some police officials. ... ...

இதுபோன்ற பொய்யான வழக்குகளை அப்பாவிகளுக்கெதிராக இந்தியக்காவல் நிலையங்களில் பதிவுசெய்வது எப்படி என்பதைப்பற்றியும் டெல்லி உயர்நீதிமன்றமும், இந்திய உச்ச நீதிமன்றமும் நன்றாகவே விளக்கியிருக்கின்றன: “சரியான நபரை சரியாக கவனித்தால் (you can get any false FIR registered, if you have right connections” – Delhi HC, Crl. M.C. 722 of 2009, Date of Order: August 06, 2010).

இந்தியாவில் எப்படிப்பட்ட பொய்யான புகாருக்கும் முதல் தகவல் அறிக்கையும், குற்றப்பத்திரிக்கையும் தயார் செய்ய முடியும் என்று நீதிமன்றங்கள் விளக்கியிருக்கின்றன. அதையும் தொடர்ந்து படித்துப் பாருங்கள்………

Police is supposed to be professional in its working culture. The fall in standard of police has gone to such an extent that in genuine cases it is difficult to get a case registered and even if registered, it wont act with sincerity but you can get any false FIR registered with it, if you have right connections. - Hon. Justice S. N. Dhingra, Delhi High Court (Crl. M.C. 722 of 2009 Date of Order: August 06, 2010).

Registration of FIRs in India: There are innumerable cases that where the complainant is a practical person, FIRs are registered immediately, copies thereof are made over to the complainant on the same day, investigation proceeds with supersonic jet speed, immediate steps are taken for apprehending the accused - The Supreme Court of India in Lalita Kumari v Govt. of U.P. & Ors Writ Petition (Crl.) No.68 of 2008 decided on 14th July, 2008

இந்தியாவில் குற்றவழக்குகளில் சர்வசாதாரணமாக நடந்துகொண்டிருக்கும் இதுபோன்ற உலக மகா அதிசயங்களைக் கண்டு மாண்புமிக்க நீதிமன்றங்களே இப்படி ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தால் பொய் வரதட்சணை வழக்குகளில் சிக்கித்தவிக்கும் அப்பாவிகளின் நிலை எப்படியிருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்.

அப்பாவி இந்தியர்களாக இருந்து பொய் வழக்குகளில் சிக்கிக்கொண்டதுதான் இவர்கள் செய்த குற்றமா?அல்லது தர்மத்தின் வழியில் இந்தியாவில் வாழ்வதுதான் பெருங்குற்றமா?

டெல்லி உயர்நீதிமன்றமும், இந்திய உச்ச நீதிமன்றமும் சொல்லியிருப்பது எவ்வளவு நிதர்சனமான உண்மை என்று நாளிதழில் வந்துள்ள பின்வரும் செய்திகளைப் படித்தால் நன்கு புலப்படும். முதல் செய்தியில் அடையாளம் தெரியாத சடலத்தை மனிதாபிமான அடிப்படையில் மீட்பதற்குக்கூட காவல்நிலைய எல்லைப் பிரச்சனையை அலசி ஆராய்ந்து பிறகுதான் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

செய்தி 1: குட்டையில் ஆண் பிணம் - போலீசாருக்குள் எல்லை பிரச்னை
20 பிப்ரவரி 2011 தினமலர்

தூத்துக்குடி: தூத்துக்குடி- மதுரை ரோட்டில் தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி அருகே தனியாருக்கு சொந்தமான யார்டுகள் உள்ளது. இதன் அருகில் தண்ணீர் தேங்கிய குட்டை உள்ளது. இதில் ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மேலும் ஆண்பிணம் கிடந்த இடம் சிப்காட், தென்பாகம், முத்தையாபுரம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களின் எல்லைகள் உள்ளது. இதன் காரணமாக மூன்று போலீஸ் ஸ்டேஷன்களில் இருந்தும் போலீசார் வந்துள்ளனர். சம்பந்தப்பட்ட இடம் எந்த போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள் வரும் என்ற சர்ச்சை அவர்களுக்குள் ஏற்பட்டது. கடைசியில் 4 மணிநேரம் கழித்து ஒருவழியாக சம்பந்தப்பட்ட இடம் சிப்காட் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்டது என்று தீர்மானிக்கப்பட்டு உடல் மீட்கப்பட்டது.

பின்வரும் இரண்டாம் செய்தியில் பாருங்கள் ஒரு வரதட்சணை வழக்கில் கோவையில் நடந்ததாக கூறப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஆந்திர மாநிலத்தில் வழக்குப் பதிவு செய்து அங்கிருந்து தமிழகத்திற்கு வந்து ஒரு கர்ப்பிணிப் பெண்ணை கருக்கலையும் அளவிற்கு துன்புறுத்தி இழுத்துச் சென்றிருக்கிறார்கள். இதில் எல்லைப் பிரச்சனை (Jurisdiction) மறக்கப்பட்டுவிட்டதா அல்லது மறைக்கப்பட்டுவிட்டதா? கருவிலேயே கொல்லப்பட்ட அந்த அப்பாவி சிசுவிற்கு நீதி??

இதுபோலத்தான் பொய் வரதட்சணை வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டுள்ள பல அப்பாவிகள் நீதியைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு நீதி கிடைக்குமா? தர்மம் வெல்லுமா?

இந்தியாவில் தர்மத்தின் வாழ்வினை சூது மட்டுமே கவ்விக்கொண்டிருக்கிறது. தர்மம் வெல்வதற்கான அறிகுறியே இல்லை.