Tuesday, August 9, 2011

சுயஉணர்வு இழந்துவிட்ட இந்தியர்கள் உயிர்த்தெழவேண்டிய நாள்

ஆகஸ்ட் 8 - வெள்ளையனே வெளியேறு இயக்கம் தோன்றிய நாள். அகிம்சையில் ஆரம்பித்த இயக்கம் பின் வன்முறையாக வெடித்து வெள்ளையர்களை விரட்டியடித்ததாக இந்திய வரலாறு கூறுகிறது.

அதுபோலவே இப்போது நாட்டையும், தவறான சட்டங்கள் மூலம் குடும்பங்களையும் சீரழிக்கும் ஊழல்வாதிகளுக்கு எதிராக தொடங்கப்பட்டிருக்கும் மக்கள் விழிப்புணர்வு இயக்கம் தீவிரமடைந்து வெடிப்பதற்கு முன்பாக ஊழல்வாதிகள் நாட்டைவிட்டு ஓடிவிடுவது நல்லது என்பதைத்தான் இந்திய வரலாறு “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தின் மூலம் காட்டுகிறதோ?

“செய் அல்லது செத்து மடி” என்ற காந்தியக் கோட்பாட்டிற்கு மக்கள் மாறுவதற்கு முன்பாக அரசியல்வாதிகள் தங்களை நல்வழிப்படுத்தி திருத்திக் கொள்ளவேண்டும் என்பதைக் காட்டும் விதமாக சென்னையில் நடந்த பேரணியின் ஒரு பகுதியை வீடியோவில் காணலாம்.




வெள்ளையனே வெளியேறு தினம்
ஆகஸ்ட் 09,2011 தினமலர்

இந்தியா சுதந்திரம் பெற காரணமாக அமைந்த போரட்டங்களுள் மிக முக்கியமானது "வெள்ளையனே வெளியேறு' போராட்டம். இதில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதன் 68வது நினைவு தினம் இன்று (ஆக., 9ம் தேதி) அனுசரிக்கப்படுகிறது.

உடனடி விடுதலை: மகாத்மா காந்தி துவக்கிய "ஒத்துழையாமை இயக்கத்தை' பல தலைவர்கள் ஏற்க மறுத்தனர். இதன் பின் ஒரு மாதம் கழித்து, 1942 ஆக., 8ம் தேதி, மும்பையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் "வெள்ளையனே வெளியேறு' என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் பேசிய மகாத்மா காந்தி "செய் அல்லது செத்துமடி' என்ற கோஷத்துடன் இப்போராட்டத்தை துவக்கி வைத்தார்.

மறுநாள் ஆக., 9ம் தேதி, காந்தி, நேரு உள்ளிட்ட அனைத்து காங்கிரஸ் தலைவர்களையும் ஆங்கிலேயர் சிறை பிடித்தனர். இதனையடுத்து இப்போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்தது.

இளைஞர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அறவழியில் துவங்கிய இப்போராட்டம் வன்முறையாக மாறியது. இது ஆங்கிலேயர்கள் மனதில், இனிமேலும் இந்தியாவை நாம் ஆள முடியாது என்று உணர வைத்தது. இதன் பின் ஐந்து ஆண்டுகள் கழித்து இதே ஆக., மாதம் தான் இந்தியா சுதந்திர காற்றை சுவாசித்தது.

No comments: