இந்தியாவிற்கு வந்து நேரில் பார்த்தபோதுதான் இந்திய மண்ணில் காவல்- நீதித்துறைகளின் துணையோடு இந்த பொய் வரதட்சணை வழக்கு அராஜகம் அப்பாவிகளுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள உண்மை நிலையை உணர்ந்து தமிழ்நாட்டில் இதுபோன்று இன்னலுறும் அப்பாவிகளை காக்க இந்தியக் குடும்ப பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பு உருவாக உறுதுணையாகயும், அடித்தளமாகவும் செயல்பட்டு தனக்கெதிரான அநீதியை எதிர்த்து போராடும் அதே வேளையில் பொய் வழக்கில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்த பல ஆயிரக்கணக்கான அப்பாவிகளுக்கு வழிகாட்டியாகவும் செயல்பட்டார்.
1998 முதல் அவருக்கெதிராக காவல் மற்றும் நீதித்துறையின் ஒத்துழைப்போடு நடந்த “சட்ட தீவிரவாதத்தை” கொஞ்சமும் தளராமல் எதிர்த்து போராடிய இவருக்கு இன்று எல்லாவித பொய் வழக்குகளிலிருந்தும் விடுதலை கிடைத்து விட்டது.
498அ X தர்மயுத்தத்திற்கு முன்னோடியாக இவரது வெற்றி அனைவருக்கும் ஒரு நல்ல விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் என்று வாழ்த்துவோம்.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் மீண்டும் தர்மம் மட்டுமே வெல்லும்!!
1 comment:
இந்த மகிழ்சியனா செய்தியை கேட்கும் பொழுது உள்ளம் குளிர்கின்றது...
வாழ்க வளமுடன் இந்த உண்மையா போராளி...
இவர்தான் கருப்பு உடைகளில் கவசமாக அணிந்து களியாட்டம் போடும் கருப்பு ஆடுகளால் கொடுரமாக குடும்ப நல கோர்ட் வாளகத்தில் தாக்கப்பட்டு 498ஏ பொய்வழக்கல் சிறையில் அடைக்கப்பட்டார்...
இவருக்கு ஏற்றபட்ட இன்னல்களை சொல்லி மாளாது...
இன்று காலம் தாழ்ந்து நீதி கிடைத்தாலும்... இவர் இழந்த இளமை, வாழ்கை யார் திருப்பி தருவது...? அடிபட்டதும் காசுக்காக எதை வேண்டுமானாலும் செய்யும் கூட்டத்திடம் அவமானப்பட்டதும் தான் மிச்சம்.
ஐயோ காலக்கொடுமையே! என்று மறையும் இந்த கேடுகெட்ட பொய்498ஏ சட்டங்களும், வேசக்கார கபடதாரிக்கூட்டங்களும்!!
தங்களை பிடித்த சனி தொலைந்தது...
பல்லாண்டு நலமுடன் வாழ வாழத்துக்கள் சகோதரரே!!
Post a Comment