Wednesday, August 31, 2011

498அ-தர்மயுத்தத்தில் இதுவும் ஒரு வகை

தர்ம சாத்திரம்

ஆயுள், பொருள், வீட்டுத் தகராறு, மந்திரம், உடலுறவு, மருந்து, வருமானம், தானம், அவமானம் இந்த ஒன்பதும் பிறருக்குத் தெரியக்கூடாது.

தர்ம சாத்திரத்தில் எவையெல்லாம் பிறருக்குத் தெரியக்கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறதோ அவையெல்லாம் இன்று இந்தியக் குடும்பங்களில் ஊரறிய காவல் நிலையங்களிலும், நீதிமன்றங்களிலும், செய்தித்தாள்களிலும் பொய் வழக்குப்போடும் மனைவியரால் பிரகடனப்படுத்தப்படுகிறது.


மகாபாரதத்தில் பாண்டவர்களின் வளமான வாழ்வைக் கண்டு பொறாமை அடைந்த துரியோதனன் பாண்டவர்களை தந்திரமாக வெல்லவேண்டும் என்று யோசித்துக்கொண்டிருக்கிறான். அப்போது சகுனி பாண்டவர்களை வெல்ல சூதாட்டம்தான் சிறந்த வழி என்று ஆலோசனை தருகிறான்.

இந்த தருணத்தில் விதுரர் கூறிய அறிவுரை என்னவென்றால் -“ துரியோதனா உனக்கு பாண்டவர்களின் சொத்துக்கள் வேண்டுமென்றால் நேரடியாக அவர்களிடம் கேட்டுப் பெற்றுக்கொள். அவர்கள் தாராளமாக உனக்குத் தந்துவிடுவார்கள். ஆனால் அண்ணன் தம்பி உறவு முறையுள்ள உங்களுக்கிடையே இருக்கும் இந்த குடும்பப் பிரச்சனைக்கு சகுனி போன்ற வெளியாட்களிடம் ஆலோசனை பெறுவதோ அல்லது உங்களது பிரச்சனையில் வெளியாட்களை அனுமதிப்பதோ மிகுந்த பேரழிவை ஏற்படுத்திவிடும்” என்று விதுரர் துரியோதனனுக்கு அறிவுரை கூறினார்.

அதைக் கேட்காத துரியோதனன் சகுனியின் ஆலோசனைப்படி தவறான வழியில் இறங்கி கடைசியில் தனது ஒட்டுமொத்தக் குடும்பத்தையே இழந்தான்.

அதுபோலத்தான் இப்போது மனைவியர் தனக்கும் கணவனுக்கும் இருக்கும் வேற்றுமைகளை தகுந்த வழியில் பேசித் தீர்த்துக்கொள்ளாமல் வழக்கறிஞர், காவல்துறை, நீதிமன்றம் என்ற வெளியாட்களை குடும்பப் பிரச்சனைக்குள் நுழைய விடுவதால் பொய் வரதட்சணை வழக்குகள் உருவாகி கடைசியில் அந்தக் குடும்பத்தின் தலைமுறையே நாசமாகிறது.

மகாபாரதத்தில் சகுனி நுழைந்து பேரழிவை ஏற்படுத்தியது போல இன்றும் கணவன், மனைவிக்கிடையே ஏற்படும் குடும்பப் பிரச்சனையில் காவல்-நீதித்துறைகள் தலையீடு செய்து பொய் வரதட்சணை வழக்குகளை ஊக்குவித்து பல குடும்பங்களை அழித்திருக்கிறது.

பொதுவாக பொய் வரதட்சணை வழக்கு பதிவு செய்யப்பட்டவுடன் கணவன் அவனது குடும்பத்துடன் சேர்த்து உடனடியாக கைது செய்யப்படுவான். இதுபோன்ற வழக்குகளுக்கு கணவனை கைது செய்ய எந்தவித ஆதாரமும் தேவையில்லை என்று இந்திய வரதட்சணை சட்டம் அப்பாவிகளை துன்புறுத்த வழிவகை செய்திருக்கிறது.

அப்படியே இந்த கைது அராஜக நடவடிக்கையைப் பொறுத்துக்கொண்டு நீதிமன்றத்தில் போராடி நீதி பெறலாம் என்றால் இந்திய நீதிமன்றங்களில் நீதிக்காக சராசரியாக 10 - 15 ஆண்டுகள் காத்திருக்கவேண்டும். இந்த காலகட்டத்திற்குள் கணவன் தனது வேலையை இழந்து, பெற்றோரை இழந்து, சுற்றத்தை இழந்து எல்லாவற்றிற்கும் மேலாக தனது வாழ்நாளில் பெரும்பகுதியையே இழந்துவிடுவான். அதற்குப் பிறகு நீதி கிடைத்தால் என்ன? கிடைக்காவிட்டால் என்ன?

பொய் வழக்கில் சிக்குபவருக்கு இருக்கும் மனவேதனையை “சுறா” என்ற படத்தில் காட்டியிருக்கிறார்கள்.

திரைப்படத்தில் காட்டியிருப்பது நிஜ வாழ்க்கையில் நடந்தால் அதன் வலி எப்படி இருக்கும் என்று பலருக்கும் தெரியாது. பலகாலம் இதுபோன்ற கொடுமைகளை அனுபவித்துவிட்ட இந்திய இளைஞர்கூட்டம் தாங்களாகவே நீதியைத் தேடிக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள் என்பதைக் காட்டும்விதமாக வந்துள்ள செய்தி கீழே தரப்பட்டுள்ளது.

Engineer kills wife, three others, self
Indo-Asian News Service, Updated: August 29, 2011


Jaipur: A 32-year-old engineer on Sunday gunned down his wife and three relatives at his in-laws' house before shooting himself dead two hours later in Rajasthan's Tonk district, police said.

Pradeep Jain, armed with two pistols and a knife, barged into his in-laws' house around 9.30 am in Devali town of the district, some 100 km from state capital Jaipur.

"He shot dead his wife Suman, two brothers-in-laws, Sanjay and Lokesh, and Lokesh's wife Ankita," said a police officer.

After the shooting spree at his in-laws' home, Pradeep went to his sister's house about 500 metre away and addressed a huge crowd and media persons for two hours from the balcony.



He alleged that he had been harassed and false criminal cases (IPC498A, 406) had been slapped on him by his wife and in-laws which had forced him to commit the crime. He said he had filed for divorce and wanted the custody of his four-year-old son.

"He remained on the balcony for two hours before shooting himself on the forehead," the officer said.

"Pradeep worked as an engineer with a fertilizer firm in Kota," he said.

At his sister's house, about 2,000 people gathered to see him. Police tried to arrest him, but he kept flaunting his gun.

Read more at: http://www.ndtv.com/article/cities/engi ... -129704&cp

No comments: