Wednesday, August 1, 2012

நீதித்துறையில் இருக்கும் ஊழலைப் பற்றி தகவல் தர நீதிமன்றம் மறுப்பது ஏன் தெரியுமா?

நாட்டில் யார் குற்றம் செய்தாலும் அதை விசாரணை செய்து தண்டனை அளிக்கும் அதிகாரம் கொண்ட நீதிமன்றங்களில் இருப்பவர்கள் குற்றம் செய்தால் தண்டிப்பது யார்? என்று கேட்டு ஒரு குடிமகன் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கோரியிருக்கிறார். ஆனால் நீதிமன்றம் அதனை வெளியிட மறுக்கிறது. நீதிவழங்கும் இடத்தில் ஒளிவுமறைவு எதற்கு?

இப்படி ரகசியமாக நீதிவழங்கப்படும் இடத்தில் பொய் வரதட்சணை வழக்குகளில் சிக்கும் அப்பாவிகளுக்கு எப்படி நேர்மையாக நீதி கிடைக்கும்?

சென்னை: மாவட்ட நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், கோர்ட் ஊழியர்கள் மீதான புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய விவரங்களை, தகவல் கோரியவருக்கு அளிக்குமாறு, மாநில தகவல் பெறும் கமிஷன் பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.

ஐகோர்ட் பதிவாளர் ஜெனரல் சொக்கலிங்கம் தாக்கல் செய்த மனு: சென்னை, கே.கே.நகரைச் சேர்ந்த இளங்கோ என்பவர், ஐகோர்ட்டில் உள்ள பொது தகவல் அதிகாரிக்கு சில தகவல்களை கேட்டு மனு அனுப்பினார்.

  1. எவ்வளவு நீதிபதிகள், ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்?
  2. ஐகோர்ட் விஜிலன்ஸ் துறையில் எத்தனை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்?
  3. ஊழல் நடவடிக்கையில் ஈடுபடும் நீதிபதிகளையும், ஊழியர்களையும் பிடிக்க தனிக் குழு உள்ளதா?
  4. மாவட்ட நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், ஊழியர்களுக்கு எதிராக பெறப்பட்ட புகார்கள் எத்தனை?
  5. பணி நீக்கம், சஸ்பெண்ட், மெமோ, என எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது?

என, சில கேள்விகளுக்கு தகவல்களை அளிக்க கோரியிருந்தார். ஐகோர்ட் நிர்வாக விவரங்களை கேட்டுள்ளதால், அதை வழங்க முடியவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, மனுதாரர் கோரிய தகவல்களை வழங்கும்படி, மாநில தகவல் பெறும் கமிஷன் கடந்த ஜனவரியில் உத்தரவிட்டது. மனுதாரர் கோரிய தகவல்களை வழங்காமல் இருக்க, தகவல் பெறும் உரிமை சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. எனவே, மாநில தகவல் பெறும் கமிஷன் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். அதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

உத்தரவு : மாவட்ட நீதிபதிகளாக பணியாற்றிய இருவருக்கு எதிராக விஜிலன்ஸ் துறையில் அளிக்கப்பட்ட புகார் மீது அவர்கள் அளித்த விளக்கங்கள், விசாரணை அதிகாரியின் முடிவு பற்றிய விவரங்களை, அரும்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர், ஐகோர்ட் பொது தகவல் அதிகாரியிடம் கோரியிருந்தார். இந்த விவரங்கள் அளிக்கப்படவில்லை.

இதையடுத்து, விவரங்களை வழங்குமாறு, மாநில தகவல் பெறும் கமிஷன், கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. பின், தனது உத்தரவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி அறிக்கை அளிக்குமாறு, கடந்த மாதம் 18ம் தேதி உத்தரவிட்டது.

மாநில தகவல் பெறும் கமிஷன் பிறப்பித்த இந்த இரண்டு உத்தரவுகளையும் எதிர்த்து, ஐகோர்ட் பதிவாளர் ஜெனரல் தாக்கல் செய்த மனுக்களை, நீதிபதிகள் ஜோதிமணி, துரைசாமி அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. பதிவாளர் ஜெனரல் சார்பில் வழக்கறிஞர் ஹாஜா முகைதீன் கிஸ்தி ஆஜரானார். மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட "டிவிஷன் பெஞ்ச்' மாநில தகவல் பெறும் கமிஷன் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தது.


======
மேற்கண்ட செய்தியில் ஒரு இந்தியக் குடிமகன் நீதிமன்ற செயல்பாடுகளைப் பற்றியும், ஊழல் ஒழிப்பு நடைமுறை பற்றியும் கேட்ட தகவலுக்கு நீதிமன்றம் மறுப்பு சொல்லியது ஏன் என்று தெரிந்துகொள்ள பின்வரும் தகவல்களை படித்துப்பாருங்கள். “மடியில் கணம் இருப்பவன்தான் பயப்படுவான்” என்ற பழமொழி எவ்வளவு உண்மை என்று தெரியும்.


டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியை வகித்த கடைசி 16 பேரில் 8 பேர் ஊழல் கறை படிந்தவர்கள் ஆவர். 6 பேர் மிகவும் நேர்மையானவர்கள். 2 பேர் எப்படிப்பட்டவர்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று கூறியுள்ளார் முன்னாள் சட்ட அமைச்சரும், சட்ட நிபுணருமான சாந்திபூஷன்.

சில வருடங்களுக்கு முன்பு டெஹல்கா இதழுக்கு சாந்திபூஷனின் மகனும், சட்ட வல்லுநருமான பிரஷாந்த் பூஷன் அளித்த ஒரு பேட்டியில், இந்தியாவின் கடைசி 16 உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளில் பாதிப்பேர் ஊழல் கறை படிந்தவர்கள் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து அவர் மீது உச்சநீதிமன்றத்தில் அவதூறு வழக்கு [^] தொடரப்பட்டது. இந்த வழக்கில் தன்னையும் ஒரு பிரதிவாதியாக சேர்க்கக் கோரி சாந்தி பூஷன் மனு செய்துள்ளார். அத்தோடு தனது மகன் சொன்னது அப்பட்டமான உண்மை. அதற்கான ஆதாரங்களையும் தான் தாக்கல் செய்வதாக கூறி சம்பந்தப்பட்ட நீதிபதிகள் குறித்த விவரங்களையும் ஆதாரங்களையும் மனுவுடன் சேர்த்து சமர்ப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக சாந்திபூஷன் தாக்கல் செய்துள்ள மனுவில், கடைசி 16 தலைமை நீதிபதிகளில் 8 பேர் ஊழல் கறை படிந்தவர்கள், அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. அதேசமயம், 6 பேர் மிக மிக நேர்மையானவர்கள். 2 பேர் எப்பட்டிப்பட்டவர்கள் என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

டெஹல்கா இதழில் இதுதொடர்பான பிரஷாந்த் பூஷனின் பேட்டி வந்திருந்த சமயத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த 16 பேர் விவரம்...

ரங்கநாத் மிஸ்ரா, கே.என்.சிங், எம்.எச்.கனியா, எல்.எம்.சர்மா, எம்.என்.வெங்கடாச்சலய்யா, ஏ.எம்.அகமதி, ஜே.எஸ்.வர்மா, எம்.என்.பன்ச்சி, ஏ.எஸ்.ஆனந்த், எஸ்.பி.பரூச்சா, பி.என்.கிர்பால், ஜி.பி.பட்நாயக், ராஜேந்திரபாபு, ஆர்.சி.லஹோத்தி, வி.என்.காரே, ஒய்.கே.சபர்வால் ஆகியோர்.

சாந்தி பூஷன் தனது மேலும் கூறுகையில், இந்த மனுவை ஒரு 3 பேர் கொண்ட பெஞ்ச் விசாரிப்பது கேலிக்கூத்தாக இருக்கும். மாறாக, ஒட்டுமொத்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளும் சேர்ந்து இந்த மனுவை விசாரிக்க வேண்டும். காரணம், இதன் மூலம் இந்திய நீதித்துறையை முற்றிலுமாக சுத்தப்படுத்த வழி பிறக்கும் என்பதால் என்று தெரிவித்துள்ளார் சாந்தி பூஷன்.

===========

தலைமையைப் பின்பற்றித்தான் துணை நீதிமன்றங்கள் இயங்குகின்றன போலிருக்கிறது!

நடுநிலை தவறாமல் நீதி வழங்கிய மனுநீதிச் சோழனும், சிபிச் சக்ரவர்த்தியும் வாழ்ந்த நாட்டில் இப்போது நீதித்துறை எந்த பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று கீழுள்ள செய்திகளில் படித்து தெரிந்துகொள்ளுங்கள். இது ஒரு சிறு துளி மட்டுமே (Tip of the Iceberg).

படத்தின் மீது கிளிக் செய்து பெரிதாக்கிப் பாருங்கள் நீதிக்காக ஆராய்ச்சி மணியடிக்கும் பசுவும் அதற்கு நீதி வழங்கிய மனுநீதிச் சோழ மன்னர் தன் மகனை தேர்ச்சக்கரத்தில் இட்டுக் கொன்ற காட்சியும் தெளிவாகத் தெரியும்.
(இது சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிலை - சிலையிலாவது சரியான நீதிகிடைக்கும் காட்சி இருப்பதைப் பார்த்து சந்தோஷப்படுங்கள்!)


தேர்வில் காப்பியடித்த மேலும் இரண்டு நீதிபதிகள் சஸ்பெண்ட்
ஆகஸ்ட் 30,2010, தினமலர்

ஐதராபாத்:ஆந்திராவில் வாரங்கல் காந்திய பல்கலைக் கழகத்தில் முதுகலை சட்டப் படிப்பு (மாஸ்டர் ஆப் லா) தேர்வில் காப்பியடித்த புகாரின் பேரில், மேலும் இரு நீதிபதிகள், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.இதே போன்று தேர்வில் காப்பியடித்த குற்றத்தின் பேரில், கடந்த 25ம் தேதி ஐந்து நீதிபதிகளை மாநில ஐகோர்ட் தலைமை நீதிபதி நிஷார் அகமது சுக்ரூ, சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.தற்போது இதே புகாரின் பேரில் வாரங்கல் சீனியர் சிவில் ஜட்ஜ் ரஜாக் உஜ்மா மற்றும் அவரது மனைவி, வாரங்கல் மாவட்ட லீகல் சர்வீஸ் அத்தாரிடி செயலர் பிரேமா ராஜேஸ்வரி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

படத்தின் மீது கிளிக் செய்து நீதிபதிகள் கையும் களவுமாக பிடிபட்ட வீடியோவைக் காணலாம்


லஞ்ச குற்றச்சாட்டின்படிபெண் மாஜிஸ்திரேட் பணி நீக்கம்

ஆகஸ்ட் 08,2010 தினமலர்

சென்னை; லஞ்ச குற்றச்சாட்டின் பேரில், பெண் மாஜிஸ்திரேட்டை பணி நீக்கம் செய்தது சரிதான் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கலில் முதல் வகுப்பு ஜுடிசியல் மாஜிஸ்திரேட் ஆக கலாராணி என்பவர் நியமிக்கப்பட்டார். அப்போது வரதட்சணை கொடுமை வழக்கு ஒன்றை விசாரித்தார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்தார். இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனை விதிப்பதற்காக, புகார் கொடுத்தவரின் தந்தையிடம் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக மாஜிஸ்திரேட் கலாராணிக்கு எதிராக புகார் கொடுக்கப்பட்டது.

பணியில் இருந்து கலாராணி, சஸ்பெண்ட் செய்யப்பட்டார். எட்டு குற்றச்சாட்டுக்கள் அடங்கிய "மெமோ' அவருக்கு வழங்கப்பட்டது.

"டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:

நீதித்துறையில் மனுதாரர் அங்கம் வகிக்கிறார். நீதி அமைப்பின் முதுகெலும்பு, கீழ் கோர்ட்டுகள் தான். இந்த அடிப்படையில் ஆட்டம் கண்டால், அது நீதித்துறையின் கட்டமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும். மக்களுக்கும் இந்த அமைப்பின் மீது நம்பிக்கை இழப்பு ஏற்படும். நீதித்துறை சுத்தமாக, திறமையாக இருக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். நீதிபதிகளுக்கு மக்களிடம் மரியாதை உள்ளது. நீதிபதிகளின் பொது வாழ்க்கை, அவர்களது பணியில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தும். மக்களுக்கு நீதித்துறை தான் கடைசி வழி. பணிகளை செய்வதற்காக நீதிபதிகள் லஞ்சம் வாங்க வேண்டும் என நினைத்தால், நீதித்துறை அமைப்பே சிதைந்து விடும். நீதித்துறையில் உள்ள ஊழல் சக்திகளை களையெடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் ஐகோர்ட்டுக்கு உள்ளது.

விசாரணை அதிகாரி முன் வைக்கப்பட்ட சாட்சியம், புகைப்படத்தை பரிசீலித்தால், மனுதாரருக்கு எதிரான ஐந்து குற்றச்சாட்டுக்கள் நிரூபணமாகின்றன. இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை அதிகாரியின் கண்டுபிடிப்பு, மனுதாரரை பணியில் இருந்து நீக்குவது போதுமானது. அனைத்து அம்சங்களையும் விசாரணை அதிகாரியும், ஒழுங்கு நடவடிக்கை அதிகாரியும் முறையாக பரிசீலித்துள்ளனர். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

மேலுள்ள செய்தி தொடர்பான நீதிமன்ற தீர்ப்பை இங்கே காணலாம்.

In the High Court of Judicature at Madras

Dated: 30.07.2010
Coram:
The Honourable Mr.Justice ELIPE DHARMA RAO
AND
The Honourable Mr.Justice K.K.SASIDHARAN
WRIT PETITION NO.15983 OF 2007
R. Kalarani ... Petitioner
Versus
1. Madras High Court
rep.by its Registrar General
Chennai-60104.
2. The State of Tamil Nadu
rep.by the Secretary to Government
Law Department
Fort St.George
Chennai-60 009. ... Respondents


பெரியகுளம் சப்-கோர்ட் : நீதிபதி "சஸ்பெண்ட்'
ஆகஸ்ட் 05,2010 தினமலர்

பெரியகுளம் : பெரியகுளம் சப்-கோர்ட் நீதிபதியாக பணிபுரிந்த மோகன் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை மாவட்ட நீதிபதி சிவானந்த ஜோதி வழங்கினார். தேனி மாவட்டம் பெரியகுளம் சப்-கோர்ட் நீதிபதி மோகன், முன்னதாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் குற்றவியல் நடுவராக பணியாற்றியுள்ளார். அங்கு கூறப்பட்ட புகார்களின் அடிப்படையில் சென்னை ஐகோர்ட் விசாரித்து வந்தது. இந்நிலையில், நிர்வாக நடவடிக்கையாக அவரை சஸ்பெண்ட் செய்து சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் விமலா உத்தரவிட்டார். மாவட்ட முதன்மை நீதிபதி சிவானந்த ஜோதி மூலம் இதற்கான உத்தரவு மோகனுக்கு நேரில் வழங்கப்பட்டது. நீதிபதி மோகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால், பெரியகுளம் சப்-கோர்ட் நீதிபதி பொறுப்பை தேனி சப்-கோர்ட் நீதிபதி முத்து சாரதா கவனிக்கவுள்ளார்.

ரௌடிக்கு மாவட்ட நீதிபதி பதவி: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு
19 Jul 2010 தினமணி

புது தில்லி, ஜூலை 18: போலீஸ் பதிவேட்டில் ரௌடிகள் பட்டியலில் இடம்பெற்றிருந்தவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டது தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்ற நிர்வாகத்தை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.

நீதிபதிகள் பணிநியமனத்தின்போது அவர்களின் நன்னடத்தை குறித்த போலீஸ் சான்றிதழ் அவசியம் என்று அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1996-ல் காஷியா முகம்மது முஜாமில் என்பவரை கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதியாக கர்நாடக உயர் நீதிமன்றம் நியமனம் செய்தது. மூன்று ஆண்டுகள் பதவியில் இருந்த அவரை, குற்றச்சாட்டுகளின்பேரில் உயர் நீதிமன்றம் பணி நீக்கம் செய்தது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் பி.எஸ்.சௌகான், ஸ்வதந்தர் குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்சு முன் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில், காஷியா குறித்த ஆவணங்களை நீதிபதிகள் ஆய்வு செய்தபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

மஜ்லிஸ்-இஸô-ஓ-தான்ஜிம் என்ற அமைப்பின் பொதுச்செயலராக செயல்பட்ட காஷியா, அப் பகுதி போலீஸ் நிலைய பதிவேட்டில் ரௌடிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

1993-ல் பத்கல் பகுதியில் ஏற்பட்ட மதக் கலவரத்துக்கு காரணமானவர் என்பது உள்பட அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.

ஆனால், அவரது குற்றப் பின்னணி குறித்து விசாரிக்காமல் கர்நாடக உயர் நீதிமன்ற நிர்வாகம் அவரை நீதிபதியாக நியமனம் செய்துள்ளது.

மூன்று ஆண்டுகளுக்குப் பின்னரே அவரைப் பற்றிய தகவல்கள் தெரியவந்து, பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், காஷியாவின் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

நீதிபதிகள் நியமனத்தின்போது, அவர்களின் நன்னடத்தை குறித்த உள்ளூர் போலீஸôரின் சான்றிதழ் அவசியம் என்றும், நீதிபதிகள் குறித்த ரகசிய ஆய்வறிக்கையை ஆண்டுதோறும் தயார் செய்ய வேண்டும் என்றும் உயர் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

=================
தலைமறைவுக் குற்றவாளி நீதிபதியாக பணியாற்றிக் கொண்டிருந்த அதிசயம்!
Indian Express Fri May 21 2010

Bhopal : A man who was declared an absconder by a court in Indore worked as a judge in a superior court in the same city for years before his past caught up with him.

The Madhya Pradesh High Court has suspended Additional District and Sessions Judge Narendra Kumar Jain for concealing the matter.

As a student of Christian College in Indore, Jain, along with four friends, was involved in a brawl with a hotel owner and his son in 1983. The owner, whose nasal bone was broken, lodged a police complaint that led to the arrest of Jain and his friends.

Jain was released on bail and appeared in court once in 1985. He was declared an absconder by the court when he did not appear later despite repeated summons.

Jain cleared an examination meant for judicial officers in 1994 but suppressed the fact that he was involved in a criminal case and was facing trial.

Registrar General of Madhya Pradesh High Court T K Kaushal told The Indian Express that Jain was suspended after a vigilance inquiry. He said an inquiry had been initiated against him.

Two months ago, the High Court suspended G P Agarwal, another Additional District Judge posted in Indore. His suspension followed the seizure of his laptop after a complaint. The laptop contained two orders, one of acquittal and another conviction, in one case of chain snatching.

Agarwal alleged that a secretary he had fired, in collusion with another judge, conspired against him.

பெண் ஊழியரை புரோக்கராக நீதிபதி வைத்திருந்தாரா?

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS

DATED: 5.1.2010

M.Mohamed Essath Ali ... Petitioner
Vs.
1.The Registrar General,High Court,Chennai-600104.

2.The Registrar,Vigilance,High Court, Chennai-600104.... Respondents

* * *

Writ Petition filed under Article 226 of the Constitution of India, praying to issue a Writ of Certiorari to call for the entire records ending with order No.C No.39/2006/VC (in Roc.No.363/2005/VC), dated 25.6.2009, passed by the 1st respondent and quash the same.

* * *

Based on the complaint, dated 19.4.2005, sent by one T.Chandran of Tirunelveli to the Registry of the High Court, to the effect that the petitioner, while working as I Additional Sub Judge, Tirunelveli had some intimacy with Tmt.Jayanthi, Head Clerk, Fast Track Court No.I, Tirunelveli, thus facilitating her to collect money from the parties in respect of the proceedings pending before the petitioner assuring favourable judgments, a discreet enquiry was conducted by the Registrar (Vigilance) High Court, Madras against the petitioner, then I Additional Sub Judge, Tirunelveli and now a District Judge, working as Sessions Judge, Mahila Court, Chengalpattu and others.

18. However, since the time of 15 days granted in the impugned communication to the petitioner to submit his written statement of defence has already lapsed, we grant two more weeks time, from the date of receipt of a copy of this order, to the petitioner to submit his explanation to the said memo. and the disciplinary authority is directed to complete the disciplinary proceedings in accordance with law within a period of six weeks from the date of receipt of written statement of defence from the petitioner. Consequently, M.P.Nos.1 and 2 of 2009 are also dismissed. No costs.
ஆகஸ்ட் 08,2010 தினமலர்

புதுடில்லி: வட மாநில நீதிபதிகள் மூன்று பேர், ஊழியர்களின் பி.எப்., பணத்திலிருந்து வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் குவித்திருப்பது, சமீபத்திய சி.பி.ஐ., விசாரணையில் தெரிய வந்துள்ளது.


உச்ச நீதிமன்றம் நீதித்துறை பற்றி தானே விமர்சனம் செய்திருக்கிறது!
NEW DELHI: Supreme Court on Thursday sounded the grim warning that the criminal justice system had been subverted, with witnesses being manipulated and trials being hijacked with judges and lawyers remaining "handicapped witnesses".

Making the chilling observation, which to many only confirmed the widely held perception of the erosion of the system, a Bench comprising Justices B N Agrawal, G S Singhvi and Aftab Alam also said that the lower judiciary had decayed.

"The courts of magistrate and munsif have ceased to be an option for the common man," the Bench said and compared the lower courts to ill-equipped and ill-staffed public health centres (PHCs) in rural areas.

"Only those people go there who have no other option," said the Bench as an apparent indicator of the low measure of public faith in these courts, which are the first points of dispute settlement for the masses.

The comment, perhaps the sharpest-ever from the apex court on the health of the country's judicial administration system.......


இவ்வளவு அதிர்ச்சியான செய்திகளுக்குப்பிறகு ஒரு காமெடி பீஸ். சிரித்துவிட்டுப் போங்கள்.



நீங்கள் நம்பினால் நம்புங்கள்


புதுடில்லி : "நீதித் துறையில் லஞ்ச நடவடிக்கைகள் இருப்பதாகக் கூறப்பட்டாலும், அது இன்னும் பெரிய அளவுக்கு உயரவில்லை' என, மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறினார்.

மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி அளித்த பேட்டி:நீதித் துறையில் லஞ்ச நடவடிக்கைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதை உண்மை இல்லை என முற்றிலும் மறுத்து விட முடியாது. அதற்காக, இதை மிகைப்படுத்தியும் கூறக் கூடாது. நீதித் துறையில் பெரிய அளவுக்கு, கவலைப்படும் அளவுக்கு லஞ்ச நடவடிக்கைகள் இல்லை.மற்ற துறைகளை பார்க்கும் போது இதில் லஞ்சம் குறைவு . இதை என்னால் உறுதியாக கூற முடியும். நீதித் துறையில் இதுபோன்ற முறைகேடுகள் இருந்தால், அதைச் சீராக்க இனி கொண்டு வரப்படும் நீதிபதிகள் கண்ணியம் மற்றும் பொறுப்பு குறித்த மசோதா சரி செய்ய உதவிடும் .இவ்வாறு வீரப்ப மொய்லி கூறினார்.

==================

நீதித்துறையில் லஞ்சம் கொஞ்சமாகத்தான் இருக்கிறது. பெரிதாக சொல்லும் அளவிற்கு இல்லை என்று அமைச்சர் பெருமைப் படுகிறார். கொஞ்சம் தானே ஊழல் நடக்கிறது என்று பெருமைப்பட்டுக்கொள்வதற்கு நீதித்துறை என்ன ரேஷன் கடையா?

அவர் பெருமைப்படும் அந்த கொஞ்சம் என்பதன் அளவு என்ன என்பதை கீழுள்ள இந்த அறிக்கையில் தெரிந்துகொள்ளுங்கள். இந்த நீதிமன்றங்களில் தான் உங்கள் மீதுபோடப்படும் பொய் வரதட்சணை கேசுகள் கையாளப்படுக்கின்றன. பொய் கேசில் சிக்கினால் உங்களது வாழ்க்கை என்னவாகும் என்று கற்பனை செய்து பார்க்க இந்தத் தகவல் உதவியாக இருக்கும்.

"Transparency International, in its Global Corruption Report 2007 has revealed recently that an amount of Rs 2,630 crores was paid in bribes to the lower judiciary in India during 2006! " - Report from Tamilnadu police journal "Criminal Investigation Review. 2007. Volume V (IV) "

Report from 2005 Report from the Transparency International India

The former Chief Justice of Supreme Court Sam Piroj Bharucha had observed that “up to 20 per cent of judges in India were corrupt.”

Is Judiciary Corrupt?

More than three-fourths (79%) of the respondents, who had been interacting with the judiciary, admitted that corruption was prevalent in the Department. Surprisingly, only 8% of those respondents felt that there was ‘no corruption’ in Judiciary. However, not much difference is seen in perception of corruption in judiciary for states having different strength of judiciary.

Experience of Corruption in Judiciary

While 38% of the respondents had experienced corruption every time they had interacted with judiciary, 53% had experienced it some time or the other. On the other hand, only 5% never experienced corruption.

Modus operandi for Bribing

During the last one year, three-fifths (59%) of respondents had paid money to lawyer, whereas 30% had paid money to court officials, and 14% to middle men to get their work done. There were higher number of respondents claiming to have paid bribe to court officials in states having low judicial strength compared to respondents from states having high judicial strength.

Table 9.10: Money Paid

Judicial Strength Wise
(Figures in per cent)

Money Recipient

High

Medium

Low

Total

Judge

05

06

04

04

Lawyer

55

64

53

59

Court officials

17

26

44

30

Public Prosecutor

17

05

08

08

Middlemen

17

12

16

14


Lawyers, who are supposed to uphold law, have ended being conduit for corruption as if there is no monitoring or initiatives on the part of bodies like bar associations. They could put up notice boards to file complaints or give telephone number for passing on information against corrupt lawyers. There is not a single case of a lawyer being suspended for practice on account of such complaints or any effort made to get such corrupt practices enquired into independently. Although cases about delays and even prevalence of corruption in judiciary have been reported, media has never reported giving specific examples of corruption by lawyers.


நீங்கள் அப்பாவியாக இதுபோன்ற ஊழல் மலிந்த நீதித்துறையில் பொய் வழக்குகள் மூலம் சிக்கிக்கொண்டிருந்தால் இவர்களுடன் இணைந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்.

National Litigant Bench

470, 19 th Main, 36 th Cross, 4 th T Block, Jayanagar, Bangalore – 560041

Phone: Manoj David ( 098403-24551); Ajay Pandey ( 096204-39797 )

PRO Contact: Gokul ( 096334-09355)

Date: 11.09.2010

PRESS RELEASE

National Litigant Bench (NLB), is a novel initiative promoted by concerned and knowledgeable youth to represent the cause of hapless litigants who approach Judiciary to mitigate their problems as last resort, but are drawn into the system unwittingly. Activists from across the country deliberated on the core issues concerning about more than 5 crore litigants who loiter around the corridors of Courts wasting precious time and energy, some at the peak of their productive age.

NLB's mission is to:

· Create Awareness and Awakening of the General Litigant on the problems faced at Court room

· Transparent Judicial Appointments on merit and moral values

· Redefine the input source to Judiciary like Indian Judicial System (IJS) similar to IAS,IPS etc.

· Bring about Litigant friendly procedures and process resulting in self service

· Address Imperialist attitude of intimidation by the Bar & Bench on all Litigants especially economical weaker section.

The objective of this conference is to identify the Judicial reforms from a Litigant's perspective to create awareness about Litigant's choices and options and expose the challenges/pitfalls in the system. Deliberation of this Conference is on National Judicial Commission to include:

· Appointment of Judges through Indian Judicial Services

· Litigant grievances/ compliant on Judges ( from the current impeachment)

· Redefine the procedure code

· Reforms in the legal education

· Research on interpretation of law

· Deployment of Technology to enable ‘Information on Demand' to stakeholders.

Resolution passed and demand sought from the Government on Judicial Reforms

1. NLB to constitute five regional bench's in North, South, East, West & Central.

2. To establish National judicial Commission in line with Election Commission for regulating Judicial dispensation, appointment, Infrastructure, Procedure, disciplinary . Proceedings in the country

a. Emulate code of conduct, ethics and professional standards for legal profession

b. Redefine litigant friendly forms and procedure for Criminal ; Civil & Tax Code

c. Judges Accountability – Litigant Grievance Redressal.

3. Establish Indian Judicial Services inline with IAS,IFS, IPS etc to improve the quality of judicial dispensation.

4. Demand entry age at 26 and retirement exit at 55 years and permit the judges to practice so as to attract youth who are connected with the society.

5. Make budgetary allocation of min of 2% of both central and state budget to and enhance adq. Infra and improve work condition of Judiciary.

6. Implement Grama Nayalaya Act a brainchild of “NAC – National Advisory Council”.

7. Redefine litigant friendly forms and procedure for Crimal & Civil & Tax Coded

8. Stop Tribunalization of Judiciary which ensures govt. cases are conducted in fast track to collect taxes and common man is discriminated.

9. Stop Appointment of retired Judges to Commission and other agencies.

10. Implement technology to enable transparency and information –on-demand.

11. Amend Bar Council of India Act to improve the professional ethics and conduct & lawyer appearing at police station.

12. Amend laws to make to encourage ‘Party-in-person' to represent/plead their cases.

13. Implement Perjury & Contempt of Court to resist misuse of law by courts.

14. Implement of ‘Limitation Act' in true letter and sprits.

15. Implement ‘Basic Law' in School Education.

16. Conduct sensitization program for Judges towards litigants needs and to be receptive and sensitive to the litigants.

17. Stop Judiciary's control over Alternate Dispute Resolution Forums.

18. Stop Misuse of provisions by Judiciary in matters relating to

a. Maintainability

b. Adjournments

c. Check bounce case;

d. Dalit atrocities cases;

e. Insurance Claims Fraud (MCOP);

f. IPC 506 (ii);

g. Matrimonial disputes

h. Bail proceedings converted into Recovery proceedings.

We request the media to give adequate publicity and to create awareness to the general public on the current status of the Judiciary.

Representative from following Chapter including Delhi, Punjab & Chandigarh, Andhra Pradesh, Karnataka, Tamil Nadu, Kerala , Singapore and Europe were presented for the Conference.

Copy of this Resolution is sent to concerned law minister of state and Union Law Minister.



Wednesday, May 30, 2012

அப்பாவி இந்தியர்களின் வயிற்றெரிச்சல் - புலம்புகிறார் பிரதம மந்திரி

ஊழல் சாம்ராஜ்யத்திற்கு எதிராக போராடும் அன்னா ஹசாரே குழு சமீபத்தில் இந்திய பிரதமர் உட்பட பல மத்திய மந்திரிகள் மீது ஊழல் அறிக்கை சமர்ப்பித்திருக்கிறார்கள். இதைக் கண்டு மனம் நொந்துபோன பிரதமர் போதுமான உண்மையை உறுதி செய்யாமல் குற்றம் சாட்டுகிறார்கள் என்று வேதனைப்பட்டு செய்தித்தாளுக்கு அறிக்கை விட்டிருக்கிறார்.

பொய் குற்றச்சாட்டு என்றவுடன் பிரதமருக்கு வலிக்கிறது. ஆனால் தினந்தோறும் பல லட்சக்கணக்கான அப்பாவி இந்தியர்கள் மீது எந்தவித ஆதாரமும் இன்றி, எந்தவித விசாரணையுமின்றி பொய் வரதட்சணை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள். அதற்குப் பிறகும் எந்தவித புலன் விசாரணையுமின்றி பொய்யான குற்ற வழக்குகள் நீதிமன்றங்களில் குப்பையாக கொட்டப்பட்டு அப்பாவிகள் தங்கள் மீதுள்ள பொய் வழக்கை எதிர்த்து போராட வாழ்நாள் முழுதும் நீதிமன்றங்களில் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

இவர்களின் வேதனையைக் கண்டு இந்திய உச்ச நீதிமன்றம் இந்த பொய் வழக்குகளை கட்டுப்படுத்துமாறு பல முறை மத்திய அரசிற்கு அறிவுரை கூறியிருக்கிறது. அவற்றையெல்லாம் மத்திய அரசாங்கம் கண்டுகொள்ளவே இல்லை. கடந்த 2010ல் கூட இந்திய உச்ச நீதிமன்றம் பொய் வரட்சணை வழக்குகளை இந்திய அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. பல அப்பாவிகள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று மத்திய அரசிற்கு அறிக்கை அனுப்பியது. அதை வாங்கி குப்பையில் போட்டுவிட்டு விவாகரத்து கேட்கும் பெண்ணுக்கு கணவனின் சொத்தை வாங்கிக் கொடுக்க வழி செய்யும் சட்டத்தை அவசர அவசரமாக மத்திய மந்திரி சபை நிறைவேற்றியிருக்கிறது.

IN THE SUPREME COURT OF INDIA
CRIMINAL APPEAL NO. 1512 OF 2010
(Arising out of SLP (Crl.) No.4684 of 2009)
Preeti Gupta & Another …Appellants
Versus
State of Jharkhand & Another ….Respondents
J U D G M E N T
Dalveer Bhandari, J.

34. Before parting with this case, we would like to observe that a serious relook of the entire provision is warranted by the legislation. It is also a matter of common knowledge that exaggerated versions of the incident are reflected in a large number of complaints. The tendency of over implication is also reflected in a very large number of cases.

35. The criminal trials lead to immense sufferings for all concerned. Even ultimate acquittal in the trial may also not be able to wipe out the deep scars of suffering of ignominy. Unfortunately a large number of these complaints have not only flooded the courts but also have led to enormous social unrest affecting peace, harmony and happiness of the society. It is high time that the legislature must take into consideration the pragmatic realities and make suitable changes in the existing law. It is imperative for the legislature to take into consideration the informed public opinion and the pragmatic realities in consideration and make necessary changes in the relevant provisions of law. We direct the Registry to send a copy of this judgment to the Law Commission and to the Union Law Secretary, Government of India who may place it before the Hon’ble Minister for Law & Justice to take appropriate steps in the larger interest of the society.


இப்போது ஒரு ஊழல் குற்றச்சாட்டு சொன்னவுடனே வலிக்கிறதே, பொய் வரதட்சணை வழக்கில் சிக்கித் தவிக்கும் அப்பாவி பொது மக்களுக்கு எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள தானாக இந்த சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால் தர்மம் மட்டுமே வெல்லும்!


குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பொது வாழ்விலிருந்து விலக தயார்': மன்மோகன் சிங்

மே 30,2012 தினமலர்
Link
புதுடில்லி: "நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்த விவகாரத்தில், என் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், பொது வாழ்விலிருந்து விலக, நான் தயாராக இருக்கிறேன்' என, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

மியான்மர் நாட்டிற்கு, மூன்று நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், நேற்று சிறப்பு விமானம் மூலம் நாடு திரும்பினார்.

அப்போது, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: நான் நிதி அமைச்சராகவும், ராஜ்யசபா எதிர்கட்சித் தலைவராகவும் இருந்திருக்கிறேன். இப்போது, பிரதமராக இருக்கிறேன். எனது வாழ்க்கை, ஒரு திறந்த புத்தகமாகவே இருக்கிறது.நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கிய விவகாரத்தில் ஊழல் நடைபெற்றதாக, அன்னா ஹசாரே குழுவினர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் துரதிருஷ்டவசமானவை. உண்மையை உறுதி செய்யாமல், குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், பொது வாழ்விலிருந்து விலக, நான் தயாராக இருக்கிறேன்.இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

Friday, April 27, 2012

இளைஞர்களை குறிவைத்துக் கொல்லும் இந்திய சட்ட தீவிரவாதம்

“இந்திய சட்ட தீவிரவாதம்” என்று உச்ச நீதிமன்றத்தால் அழைக்கப்படும் பொய் வரதட்சணை வழக்குகள் இந்தியாவில் திருமணம் செய்யும் இளைஞர்களின் வாழ்வை அழித்து நாசம் செய்து வருவது பல காலமாக நடந்து வருகிறது என்பது உலகறிந்த உண்மை.

பொய் வரதட்சணை வழக்கு என்ற அநீதியால் உயிரையும், மானத்தையும் இழந்தவர்கள் பலர். இந்த அநீதியான பொய் வரதட்சணை வழக்கில் மணிகண்டன் என்ற 33 வயது இளைஞர் சென்ற ஆண்டு கைது செய்யப்பட்டு அவமானப் படுத்தப்பட்டதால் மனவேதனையடைந்து அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் 26 ஏப்ரல் 2011 அன்று மாரடைப்பால் காலமடைந்தார். பின்வரும் வீடியோவைப் பாருங்கள். அவரது இழப்பிற்கு பதில் சொல்லப்போவது யார்?



தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். ஆனால் கடைசியில் தர்மம் வெல்லும் என்று சொல்வார்கள். இந்தியாவில் சட்டத்தின் துணையோடு நடக்கும் இந்த அதர்மத்தில் தர்மம் வெல்லும்போது தர்மத்தை பின்பற்றுபவர்கள் உயிரோடு இருக்க முடியாது. அதுதான் இந்திய சட்ட தீவிரவாதத்தின் விளைவு.

இந்த இந்திய சட்ட தீவிரவாதம் குறிப்பாக உயர்கல்வி கற்ற, உயர் பதவியில் இருக்கும் 28 முதல் 35 வயதிற்குள் இருக்கும் இளைஞர்களை குறிவைத்து செயல்படுகிறது. ஏனென்றால் இந்த வயதிற்குள் இருக்கும் இளைஞர்கள் துடிப்பாக செயல்பட்டு நல்ல பணிகளில் இருந்து அதிக வருமானம் ஈட்டுவதால் அவர்களை பொய் வரதட்சணை வழக்கு மூலம் மிரட்டி பணம் பறிக்கலாம் என்பதால் சட்டத்தின் துணையோடு இந்த சதிவேலை பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த அதர்ம யுத்தத்தில் மானத்தையும், உயிரையும் இழந்த இளைஞர்கள் பலர். அவர்களுக்கு இந்த சமுதயாம் என்ன பதில் சொல்லப் போகிறது?

Thursday, February 16, 2012

பொய் வரதட்சணை வழக்கிலிருந்து தப்புவது எப்படி?

பொய் வரதட்சணை வழக்கில் சிக்கியவர் தப்பிக்கலாம். ஆனால் பொய் வரதட்சணை வழக்குப் போடுபவர் தப்பிக்க முடியுமா?

பதில்: தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். ஆனால் தர்மம் மட்டுமே வெல்லும்.


தற்கொலைக்கு தூண்டினாரா கிரகலட்சுமி? வழக்கிலிருந்து விடுதலை கோரிய மனு தள்ளுபடி

பிப்ரவரி 15,2012 தினமலர்


சென்னை : தற்கொலைக்கு தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, கிரகலட்சுமி உள்ளிட்ட ஐந்து பேர் தாக்கல் செய்த மனுவை, சென்னை மகளிர் கோர்ட் தள்ளுபடி செய்தது.

நடிகர் பிரசாந்துக்கும், தி.நகரைச் சேர்ந்த கிரகலட்சுமி என்பவருக்கும் திருமணம் நடந்தது. சென்னை குடும்ப நல கோர்ட்டில், நடிகர் பிரசாந்த் மனு தாக்கல் செய்து, கிரகலட்சுமியுடன் நடந்த திருமணம் செல்லாது என உத்தரவு பெற்றார். (மேலும் நடிகர் பிரசாந்த் மீது IPC498A பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட வரதட்சணை வழக்கும் பொய்யான வழக்கு என்று தள்ளுபடி செய்யப்பட்டது).

கிரகலட்சுமியின் சகோதரர் பொன்குமார். அவருக்கும் அபிராமி என்பவருக்கும், 2006ம் ஆண்டு திருமணம் நடந்தது. அபிராமியிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக, கிரகலட்சுமியின் குடும்பத்தினர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. 2010ம் ஆண்டு, குளியலறையில் தூக்குப் போட்டு அபிராமி தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து, தற்கொலைக்கு தூண்டியதாக கிரகலட்சுமி, அவரது தாயார் சிவகாமசுந்தரி, சகோதரர் உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணை, சென்னை மகளிர் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, சிவகாமசுந்தரி, கிரகலட்சுமி உள்ளிட்ட ஐந்து பேர், மகளிர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி சேதுமாதவன் உத்தரவிட்டார்.

Wednesday, December 28, 2011

வந்தார் தர்மயுத்தத்தில் வென்றார்!

துடிப்பான பொறியியல் வல்லுனராக மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிந்த திரு. கலைசெல்வன் 1997ல் இந்தியாவில் நடந்த திருமணத்தில் தவறான நபரால் வஞ்சிக்கப்பட்டு இந்திய உச்ச நீதிமன்றத்தால் “அப்பாவிகளுக்கெதிரான சட்ட தீவிரவாதம்” என்று அழைக்கப்படும் பொய் வரதட்சணை வழக்கு மூலம் தாக்கப்பட்டார். துணிவுமிக்க இந்த இளைஞர் அநீதியைக் கண்டு அஞ்சி நடுங்காமல் இந்த வன்முறையை எதிர்த்து போராட கொஞ்சமும் தயங்காமல் இந்தியாவிற்கு வந்தார்.


இந்தியாவிற்கு வந்து நேரில் பார்த்தபோதுதான் இந்திய மண்ணில் காவல்- நீதித்துறைகளின் துணையோடு இந்த பொய் வரதட்சணை வழக்கு அராஜகம் அப்பாவிகளுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள உண்மை நிலையை உணர்ந்து தமிழ்நாட்டில் இதுபோன்று இன்னலுறும் அப்பாவிகளை காக்க இந்தியக் குடும்ப பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பு உருவாக உறுதுணையாகயும், அடித்தளமாகவும் செயல்பட்டு தனக்கெதிரான அநீதியை எதிர்த்து போராடும் அதே வேளையில் பொய் வழக்கில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்த பல ஆயிரக்கணக்கான அப்பாவிகளுக்கு வழிகாட்டியாகவும் செயல்பட்டார்.







1998 முதல் அவருக்கெதிராக காவல் மற்றும் நீதித்துறையின் ஒத்துழைப்போடு நடந்த “சட்ட தீவிரவாதத்தை” கொஞ்சமும் தளராமல் எதிர்த்து போராடிய இவருக்கு இன்று எல்லாவித பொய் வழக்குகளிலிருந்தும் விடுதலை கிடைத்து விட்டது.

498அ X தர்மயுத்தத்திற்கு முன்னோடியாக இவரது வெற்றி அனைவருக்கும் ஒரு நல்ல விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் என்று வாழ்த்துவோம்.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் மீண்டும் தர்மம் மட்டுமே வெல்லும்!!

Sunday, November 20, 2011

இந்தியக் குடும்பங்களை காக்கக் கிளம்பிய இளைஞர் படை

இந்தியாவில் பெண்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட சட்டங்களைப் பயன்படுத்தி குடும்பங்களை பிரித்து அழிக்கும் பணி செம்மையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் பல அப்பாவிக் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிட்டிருக்கிறது.

இந்தியக் குடும்பங்கள் இப்படி அழிவுப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதை தடுத்து குடும்பங்களைக் காத்து குழந்தைகளின் எதிர்காலத்தை ஒளிமயமாக்க இந்தியக் குடும்ப பாதுகாப்பு இயக்கம் உருவாகி செயல்பட்டு வருகிறது. அதன் சகோரக் கழகமான அகில இந்திய ஆண்கள் நலச் சங்கம் உலக ஆண்கள் தினத்தை இந்திய குடும்ப பாதுகாப்பு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் தினமாக அனுசரித்து பெண்கள் பாதுகாப்பு என்ற பெயரில் ஒருதலைபட்சமாக சட்டங்களை இயற்றி ஆண்களை துன்புறுத்தி குடும்பங்களை சிதைக்கும் அநீதிக்கெதிரான விழிப்புணர்ச்சி பிரசாரத்தை நேற்று சென்னையில் நடத்தினார்கள்.

சென்னை : "பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள், ஆண்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுவதால், குடும்ப அமைப்பு சிதையும் அபாயம் உள்ளது' என, அகில இந்திய ஆண்கள் நலச் சங்க, சென்னை கிளை அமைப்பாளர் பிரான்சிஸ் கூறினார்.

உலக ஆண்கள் தினத்தையொட்டி, நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கணவன் - மனைவி, மாமியார் - மருமகள் ஆகியோருக்கிடையே எழும் சிறிய பிரச்னைகளுக்கும், வரதட்சணை தடுப்பு சட்டத்தின் கீழ், பெண்கள், தமது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பொய் வழக்கு தொடர்கின்றனர். குடும்ப வன்முறை, விவாகரத்து, குழந்தை காப்புரிமை, ஜீவனாம்சம், கள்ளத்தொடர்பு, தற்கொலை ஆகியவை குறித்த சட்டங்களைக் கொண்டு, பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதை விட, இவற்றை ஆண்களுக்கு எதிராக, தவறாக பயன்படுத்துகின்றனர். இதனால், நம் பாரம்பரிய சிறப்புகளில் ஒன்றான குடும்ப அமைப்பு முறை சிதையும் அபாயம் உள்ளது. எனவே, ஆண், பெண் பாகுபாடின்றி, இருவரையும் சமமாக கருதும்படி, சட்டங்கள் திருத்தப்பட வேண்டும். இவ்வாறு பிரான்சிஸ் கூறினார்.இந்திய குடும்ப பாதுகாப்பு இயக்கத்தின், சென்னை கிளை அமைப்பாளர் கலைச்செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Wednesday, August 31, 2011

498அ-தர்மயுத்தத்தில் இதுவும் ஒரு வகை

தர்ம சாத்திரம்

ஆயுள், பொருள், வீட்டுத் தகராறு, மந்திரம், உடலுறவு, மருந்து, வருமானம், தானம், அவமானம் இந்த ஒன்பதும் பிறருக்குத் தெரியக்கூடாது.

தர்ம சாத்திரத்தில் எவையெல்லாம் பிறருக்குத் தெரியக்கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறதோ அவையெல்லாம் இன்று இந்தியக் குடும்பங்களில் ஊரறிய காவல் நிலையங்களிலும், நீதிமன்றங்களிலும், செய்தித்தாள்களிலும் பொய் வழக்குப்போடும் மனைவியரால் பிரகடனப்படுத்தப்படுகிறது.


மகாபாரதத்தில் பாண்டவர்களின் வளமான வாழ்வைக் கண்டு பொறாமை அடைந்த துரியோதனன் பாண்டவர்களை தந்திரமாக வெல்லவேண்டும் என்று யோசித்துக்கொண்டிருக்கிறான். அப்போது சகுனி பாண்டவர்களை வெல்ல சூதாட்டம்தான் சிறந்த வழி என்று ஆலோசனை தருகிறான்.

இந்த தருணத்தில் விதுரர் கூறிய அறிவுரை என்னவென்றால் -“ துரியோதனா உனக்கு பாண்டவர்களின் சொத்துக்கள் வேண்டுமென்றால் நேரடியாக அவர்களிடம் கேட்டுப் பெற்றுக்கொள். அவர்கள் தாராளமாக உனக்குத் தந்துவிடுவார்கள். ஆனால் அண்ணன் தம்பி உறவு முறையுள்ள உங்களுக்கிடையே இருக்கும் இந்த குடும்பப் பிரச்சனைக்கு சகுனி போன்ற வெளியாட்களிடம் ஆலோசனை பெறுவதோ அல்லது உங்களது பிரச்சனையில் வெளியாட்களை அனுமதிப்பதோ மிகுந்த பேரழிவை ஏற்படுத்திவிடும்” என்று விதுரர் துரியோதனனுக்கு அறிவுரை கூறினார்.

அதைக் கேட்காத துரியோதனன் சகுனியின் ஆலோசனைப்படி தவறான வழியில் இறங்கி கடைசியில் தனது ஒட்டுமொத்தக் குடும்பத்தையே இழந்தான்.

அதுபோலத்தான் இப்போது மனைவியர் தனக்கும் கணவனுக்கும் இருக்கும் வேற்றுமைகளை தகுந்த வழியில் பேசித் தீர்த்துக்கொள்ளாமல் வழக்கறிஞர், காவல்துறை, நீதிமன்றம் என்ற வெளியாட்களை குடும்பப் பிரச்சனைக்குள் நுழைய விடுவதால் பொய் வரதட்சணை வழக்குகள் உருவாகி கடைசியில் அந்தக் குடும்பத்தின் தலைமுறையே நாசமாகிறது.

மகாபாரதத்தில் சகுனி நுழைந்து பேரழிவை ஏற்படுத்தியது போல இன்றும் கணவன், மனைவிக்கிடையே ஏற்படும் குடும்பப் பிரச்சனையில் காவல்-நீதித்துறைகள் தலையீடு செய்து பொய் வரதட்சணை வழக்குகளை ஊக்குவித்து பல குடும்பங்களை அழித்திருக்கிறது.

பொதுவாக பொய் வரதட்சணை வழக்கு பதிவு செய்யப்பட்டவுடன் கணவன் அவனது குடும்பத்துடன் சேர்த்து உடனடியாக கைது செய்யப்படுவான். இதுபோன்ற வழக்குகளுக்கு கணவனை கைது செய்ய எந்தவித ஆதாரமும் தேவையில்லை என்று இந்திய வரதட்சணை சட்டம் அப்பாவிகளை துன்புறுத்த வழிவகை செய்திருக்கிறது.

அப்படியே இந்த கைது அராஜக நடவடிக்கையைப் பொறுத்துக்கொண்டு நீதிமன்றத்தில் போராடி நீதி பெறலாம் என்றால் இந்திய நீதிமன்றங்களில் நீதிக்காக சராசரியாக 10 - 15 ஆண்டுகள் காத்திருக்கவேண்டும். இந்த காலகட்டத்திற்குள் கணவன் தனது வேலையை இழந்து, பெற்றோரை இழந்து, சுற்றத்தை இழந்து எல்லாவற்றிற்கும் மேலாக தனது வாழ்நாளில் பெரும்பகுதியையே இழந்துவிடுவான். அதற்குப் பிறகு நீதி கிடைத்தால் என்ன? கிடைக்காவிட்டால் என்ன?

பொய் வழக்கில் சிக்குபவருக்கு இருக்கும் மனவேதனையை “சுறா” என்ற படத்தில் காட்டியிருக்கிறார்கள்.

திரைப்படத்தில் காட்டியிருப்பது நிஜ வாழ்க்கையில் நடந்தால் அதன் வலி எப்படி இருக்கும் என்று பலருக்கும் தெரியாது. பலகாலம் இதுபோன்ற கொடுமைகளை அனுபவித்துவிட்ட இந்திய இளைஞர்கூட்டம் தாங்களாகவே நீதியைத் தேடிக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள் என்பதைக் காட்டும்விதமாக வந்துள்ள செய்தி கீழே தரப்பட்டுள்ளது.

Engineer kills wife, three others, self
Indo-Asian News Service, Updated: August 29, 2011


Jaipur: A 32-year-old engineer on Sunday gunned down his wife and three relatives at his in-laws' house before shooting himself dead two hours later in Rajasthan's Tonk district, police said.

Pradeep Jain, armed with two pistols and a knife, barged into his in-laws' house around 9.30 am in Devali town of the district, some 100 km from state capital Jaipur.

"He shot dead his wife Suman, two brothers-in-laws, Sanjay and Lokesh, and Lokesh's wife Ankita," said a police officer.

After the shooting spree at his in-laws' home, Pradeep went to his sister's house about 500 metre away and addressed a huge crowd and media persons for two hours from the balcony.



He alleged that he had been harassed and false criminal cases (IPC498A, 406) had been slapped on him by his wife and in-laws which had forced him to commit the crime. He said he had filed for divorce and wanted the custody of his four-year-old son.

"He remained on the balcony for two hours before shooting himself on the forehead," the officer said.

"Pradeep worked as an engineer with a fertilizer firm in Kota," he said.

At his sister's house, about 2,000 people gathered to see him. Police tried to arrest him, but he kept flaunting his gun.

Read more at: http://www.ndtv.com/article/cities/engi ... -129704&cp