இந்திய தண்டனை சட்டப்பிரிவு IPC-498A என்னும் வரதட்சணை தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி பொய் வழக்குகளை உருவாக்கி பல ஆண்டுகளாக இந்தியாவில் அப்பாவிகளுக்கு எதிராக நடந்துகொண்டிருக்கும் “சட்டதீவிரவாத” அதர்மத்திற்கு எதிரான தர்மயுத்தம்.
ஆயுள், பொருள், வீட்டுத் தகராறு, மந்திரம், உடலுறவு, மருந்து, வருமானம், தானம், அவமானம் இந்த ஒன்பதும் பிறருக்குத் தெரியக்கூடாது.
தர்ம சாத்திரத்தில் எவையெல்லாம் பிறருக்குத் தெரியக்கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறதோ அவையெல்லாம் இன்று இந்தியக் குடும்பங்களில் ஊரறிய காவல் நிலையங்களிலும், நீதிமன்றங்களிலும், செய்தித்தாள்களிலும் பொய் வழக்குப்போடும் மனைவியரால் பிரகடனப்படுத்தப்படுகிறது.
மகாபாரதத்தில் பாண்டவர்களின் வளமான வாழ்வைக் கண்டு பொறாமை அடைந்த துரியோதனன் பாண்டவர்களை தந்திரமாக வெல்லவேண்டும் என்று யோசித்துக்கொண்டிருக்கிறான். அப்போது சகுனி பாண்டவர்களை வெல்ல சூதாட்டம்தான் சிறந்த வழி என்று ஆலோசனை தருகிறான்.
இந்த தருணத்தில் விதுரர் கூறிய அறிவுரை என்னவென்றால் -“ துரியோதனா உனக்கு பாண்டவர்களின் சொத்துக்கள் வேண்டுமென்றால் நேரடியாக அவர்களிடம் கேட்டுப் பெற்றுக்கொள். அவர்கள் தாராளமாக உனக்குத் தந்துவிடுவார்கள். ஆனால் அண்ணன் தம்பி உறவு முறையுள்ள உங்களுக்கிடையே இருக்கும் இந்த குடும்பப் பிரச்சனைக்கு சகுனி போன்ற வெளியாட்களிடம் ஆலோசனை பெறுவதோ அல்லது உங்களது பிரச்சனையில் வெளியாட்களை அனுமதிப்பதோ மிகுந்த பேரழிவை ஏற்படுத்திவிடும்” என்று விதுரர் துரியோதனனுக்கு அறிவுரை கூறினார்.
அதைக் கேட்காத துரியோதனன் சகுனியின் ஆலோசனைப்படி தவறான வழியில் இறங்கி கடைசியில் தனது ஒட்டுமொத்தக் குடும்பத்தையே இழந்தான்.
அதுபோலத்தான் இப்போது மனைவியர் தனக்கும் கணவனுக்கும் இருக்கும் வேற்றுமைகளை தகுந்த வழியில் பேசித் தீர்த்துக்கொள்ளாமல் வழக்கறிஞர், காவல்துறை, நீதிமன்றம் என்ற வெளியாட்களை குடும்பப் பிரச்சனைக்குள் நுழைய விடுவதால் பொய் வரதட்சணை வழக்குகள் உருவாகி கடைசியில் அந்தக் குடும்பத்தின் தலைமுறையே நாசமாகிறது.
மகாபாரதத்தில் சகுனி நுழைந்து பேரழிவை ஏற்படுத்தியது போல இன்றும் கணவன், மனைவிக்கிடையே ஏற்படும் குடும்பப் பிரச்சனையில் காவல்-நீதித்துறைகள் தலையீடு செய்து பொய் வரதட்சணை வழக்குகளை ஊக்குவித்து பல குடும்பங்களை அழித்திருக்கிறது.
பொதுவாக பொய் வரதட்சணை வழக்கு பதிவு செய்யப்பட்டவுடன் கணவன் அவனது குடும்பத்துடன் சேர்த்து உடனடியாக கைது செய்யப்படுவான். இதுபோன்ற வழக்குகளுக்கு கணவனை கைது செய்ய எந்தவித ஆதாரமும் தேவையில்லை என்று இந்திய வரதட்சணை சட்டம் அப்பாவிகளை துன்புறுத்த வழிவகை செய்திருக்கிறது.
அப்படியே இந்த கைது அராஜக நடவடிக்கையைப் பொறுத்துக்கொண்டு நீதிமன்றத்தில் போராடி நீதி பெறலாம் என்றால் இந்திய நீதிமன்றங்களில் நீதிக்காக சராசரியாக 10 - 15 ஆண்டுகள் காத்திருக்கவேண்டும். இந்த காலகட்டத்திற்குள் கணவன் தனது வேலையை இழந்து, பெற்றோரை இழந்து, சுற்றத்தை இழந்து எல்லாவற்றிற்கும் மேலாக தனது வாழ்நாளில் பெரும்பகுதியையே இழந்துவிடுவான். அதற்குப் பிறகு நீதி கிடைத்தால் என்ன? கிடைக்காவிட்டால் என்ன?
பொய் வழக்கில் சிக்குபவருக்கு இருக்கும் மனவேதனையை “சுறா” என்ற படத்தில் காட்டியிருக்கிறார்கள்.
திரைப்படத்தில் காட்டியிருப்பது நிஜ வாழ்க்கையில் நடந்தால் அதன் வலி எப்படி இருக்கும் என்று பலருக்கும் தெரியாது. பலகாலம் இதுபோன்ற கொடுமைகளை அனுபவித்துவிட்ட இந்திய இளைஞர்கூட்டம் தாங்களாகவே நீதியைத் தேடிக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள் என்பதைக் காட்டும்விதமாக வந்துள்ள செய்தி கீழே தரப்பட்டுள்ளது.
Engineer kills wife, three others, self Indo-Asian News Service, Updated: August 29, 2011
Jaipur: A 32-year-old engineer on Sunday gunned down his wife and three relatives at his in-laws' house before shooting himself dead two hours later in Rajasthan's Tonk district, police said.
Pradeep Jain, armed with two pistols and a knife, barged into his in-laws' house around 9.30 am in Devali town of the district, some 100 km from state capital Jaipur.
"He shot dead his wife Suman, two brothers-in-laws, Sanjay and Lokesh, and Lokesh's wife Ankita," said a police officer.
After the shooting spree at his in-laws' home, Pradeep went to his sister's house about 500 metre away and addressed a huge crowd and media persons for two hours from the balcony.
He alleged that he had been harassed and false criminal cases (IPC498A, 406) had been slapped on him by his wife and in-laws which had forced him to commit the crime. He said he had filed for divorce and wanted the custody of his four-year-old son. "He remained on the balcony for two hours before shooting himself on the forehead," the officer said.
"Pradeep worked as an engineer with a fertilizer firm in Kota," he said.
At his sister's house, about 2,000 people gathered to see him. Police tried to arrest him, but he kept flaunting his gun.
ஆகஸ்ட் 8 - வெள்ளையனே வெளியேறு இயக்கம் தோன்றிய நாள். அகிம்சையில் ஆரம்பித்த இயக்கம் பின் வன்முறையாக வெடித்து வெள்ளையர்களை விரட்டியடித்ததாக இந்திய வரலாறு கூறுகிறது.
அதுபோலவே இப்போது நாட்டையும், தவறான சட்டங்கள் மூலம் குடும்பங்களையும் சீரழிக்கும் ஊழல்வாதிகளுக்கு எதிராக தொடங்கப்பட்டிருக்கும் மக்கள் விழிப்புணர்வு இயக்கம் தீவிரமடைந்து வெடிப்பதற்கு முன்பாக ஊழல்வாதிகள் நாட்டைவிட்டு ஓடிவிடுவது நல்லது என்பதைத்தான் இந்திய வரலாறு “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தின் மூலம் காட்டுகிறதோ?
“செய் அல்லது செத்து மடி” என்ற காந்தியக் கோட்பாட்டிற்கு மக்கள் மாறுவதற்கு முன்பாக அரசியல்வாதிகள் தங்களை நல்வழிப்படுத்தி திருத்திக் கொள்ளவேண்டும் என்பதைக் காட்டும் விதமாக சென்னையில் நடந்த பேரணியின் ஒரு பகுதியை வீடியோவில் காணலாம்.
இந்தியா சுதந்திரம் பெற காரணமாக அமைந்த போரட்டங்களுள் மிக முக்கியமானது "வெள்ளையனே வெளியேறு' போராட்டம். இதில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதன் 68வது நினைவு தினம் இன்று (ஆக., 9ம் தேதி) அனுசரிக்கப்படுகிறது.
உடனடி விடுதலை: மகாத்மா காந்தி துவக்கிய "ஒத்துழையாமை இயக்கத்தை' பல தலைவர்கள் ஏற்க மறுத்தனர். இதன் பின் ஒரு மாதம் கழித்து, 1942 ஆக., 8ம் தேதி, மும்பையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் "வெள்ளையனே வெளியேறு' என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் பேசிய மகாத்மா காந்தி "செய் அல்லது செத்துமடி' என்ற கோஷத்துடன் இப்போராட்டத்தை துவக்கி வைத்தார்.
மறுநாள் ஆக., 9ம் தேதி, காந்தி, நேரு உள்ளிட்ட அனைத்து காங்கிரஸ் தலைவர்களையும் ஆங்கிலேயர் சிறை பிடித்தனர். இதனையடுத்து இப்போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்தது.
இளைஞர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அறவழியில் துவங்கிய இப்போராட்டம் வன்முறையாக மாறியது. இது ஆங்கிலேயர்கள் மனதில், இனிமேலும் இந்தியாவை நாம் ஆள முடியாது என்று உணர வைத்தது. இதன் பின் ஐந்து ஆண்டுகள் கழித்து இதே ஆக., மாதம் தான் இந்தியா சுதந்திர காற்றை சுவாசித்தது.
இந்திய சட்டங்கள்சமூகவிரோதிகளால்தவறாகப்பயன்படுத்தப்பட்டுஅப்பாவிகளைதுன்புறுத்தும்ஆயுதமாகபயன்படுத்தப்படும்போதுநிரபராதிகளைபாதுகாக்கவேண்டியதலையாயகடமைகாவல்துறைக்கும், அதனைக்கண்காணிக்கவேண்டியகடமைநீதித்துறைக்கும்இருக்கிறது.
கடவுளைநம்பாதவர்கள்கூடகாவல்துறையைநம்புகிறார்கள், நீதிமன்றங்களைநீதி கிடைக்கும்கோயிலாகநம்பிமதித்துவருகிறார்கள். ஆனால்இந்திய “சட்ட தீவிரவாதம்”(Legal Terrorism) என்று உச்ச நீதிமன்றத்தால் பெயரிடப்பட்டு இப்போது நாடு முழுதும் புற்றுநோய் போல பரவியிருக்கும்பொய்வரதட்சணைவழக்குகள்இந்தநம்பிக்கைகளைமுற்றிலுமாகதகர்த்தெறிந்துவிட்டன.
அப்பாவிகளுக்கெதிராக தவறானநோக்கில்ஒருவர்பொய்யானவரதட்சணைப்புகார்கொடுக்கும்போதுஅதனை பதிவு செய்யும் காவல்துறை முறையாகபுலன்விசாரணைசெய்துகுற்றத்திற்கானசரியானஆதாரங்கள்இருந்தால் மட்டுமே நீதிமன்றத்தில் வழக்கை நடத்துவதற்கான முகாந்திரம் இருக்கிறது என்றுஅறிக்கைதயார் செய்து வழக்கை நீதிமன்றத்திற்கு அனுப்பவேண்டும். ஆனால்நடைமுறையில்இருக்கும்வழக்கமோவேறுவிதமாகஇருக்கிறது.
(Savitri Devi Vs.Ramesh Chand,CRL. R 462/2002, Dt:19 May 2003)
“Once a complaint is lodged under Sections 498AIPC whether there are exaggerated allegations or there isno evidence, it comes as an easy tool in the hands of Police and agencies like Crime Against Women Cell to hound them with the threat of arrest making them run here and there … … … …Thousands of such complaints and cases are pending and are being lodged day in and day out”
குற்ற வழக்குகளில் புலன்விசாரணை மூலம் உண்மையை அறிந்துகொள்ளாமல் தங்களிடம் சிக்கும் அப்பாவிகளை குற்றவாளி என சித்தரித்து பொய் வழக்குகளை நீதிமன்றத்தில் கொட்டி அப்பாவிகளை துன்புறுத்தும் வழக்கம் காவல்துறைக்குபுதிதானவிஷயமல்ல. இந்திய சுதந்திரத்திற்குமுன்பான காலத்திலேயேபுலன்விசாரணையில்கடமைதவறும்நடைமுறைகாவல்துறையில்இருந்துவந்திருக்கிறது.
இந்தியசட்டவரலாற்றைசற்றுக்கூர்ந்துநோக்கினால்இந்தஉண்மைபுலப்படும். “ஒருவர் மீது குற்றப் புகார் பதிவு செய்யப்படும்போது சரியான புலன் விசாரணை செய்து குற்றம் சாட்டப்பட்டவர் உண்மையாகவே குற்றம் புரிந்தாரா அல்லது புகார்தாரர் காழ்ப்புணர்ச்சி காரணமாக சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி பொய்யான புகார் அளித்துள்ளாரா என்பதை முறையாக விசாரணை செய்து உறுதிப்படுத்தாமல் கடமையை மறந்துஅதிகாரம்தன்னிடம்இருக்கிறதுஎன்றஎண்ணத்தில்மிகவும்வசதியாகமரத்தடிநிழலில்அமர்ந்துகொண்டுகுற்றம்சாட்டப்பட்டுள்ளஏழையின்கண்களில்மிளகாய்பொடியைத்தூவிதுன்புறுத்திகுற்றத்தைஒப்புக்கொள்ளச்செய்துநீதிபதியின்முன்குற்றவாளியாகநிறுத்தும்கொடியவழக்கம்பலநூற்றாண்டுகளுக்கேமுன்பேஇந்தியாவில்இருந்திருக்கிறது.”இந்த இந்திய சட்டநடைமுறையைப் பற்றி ஆங்கிலேயநீதிபதிதனதுபுத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
A History of the Criminal Law of England
1883. Vol.1: Page 442, MacMillan & Co. London
Author: Sir James Fitzjames Stephen, A Judge of the High Court of Justice, Queen’s Bench Division
During the discussions which took place on the Indian Code of Criminal Procedure in 1872 some observations were made on the reasons which occasionally lead native police officers to apply torture to prisoners. An experienced civil officer observed, “There is a great deal of laziness in it. It is far pleasanter to sit comfortably in the shade rubbing red pepper into a poor devil's eyes than to go about in the sun hunting up evidence." This was a new view to me, but I have no doubt of its truth.
இதுபோன்ற அநீதி இப்போதும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. அது எப்படி நடந்துகொண்டிருக்கிறது என்பதற்கு ஒரு வீடியோ செய்தி இதோ.
“காவல் நிலையத்தில் பதிவாகும்குற்றவழக்குகளில்கடமைஉணர்வுடன்சரியானபுலன்விசாரணைசெய்துஆதாரங்களைதிரட்டிவழக்கின் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ளாமல் தங்களிடம் வருகின்ற எல்லாப் புகார்களுக்கும் விசாரணையை முடித்து வழக்கை நீதிமன்றத்திற்கு அனுப்பிவிட்டதாகக் காட்டி தங்கள் கடனை கழித்துக் கொள்வதற்காக கையில்கிடைத்தஒருஅப்பாவிஏழைத்தொழிலாளியை பலியாடு போல பயன்படுத்தி அவரைகுற்றவாளியாகசித்தரித்து54 முறைசிறையில்தள்ளியிருக்கிறார்கள்”என்றுதமிழககாவல்துறைத்தலைவர்எழுதியிருக்கிறார். பதவியிலிருந்துஓப்வுபெற்றபிறகுஅவரால்இந்தக்கொடுமையைப்பற்றிஎழுதத்தான்முடிந்தது. தான்பதவியிலிருந்தபோதேஅந்தஅப்பாவிக்குஇழைக்கப்பட்டஅநீதிக்குபதில்சொல்லமுடியவில்லையே!இது சட்டத்தின்குற்றமா? அல்லதுசட்டத்தைசெயல்படுத்துபவர்களின்குற்றமா?
Tamilnadu Police Department
Criminal Investigation Department Review, 2007: Issue: IV
Criminal Justice System Precept and Practice
Tr. A.X.Alexander, IPS., (Retd. DGP)
There was a burglary in 1997 … … … within three hours the thief was apprehended and the property was recovered. He was sent to the prison and subsequently detained under Act 14 of 1982. He had 54 convictions.
... ... ...After the release, the thief and his wife came to see us and I asked him why he had committed thefts so many times. He replied that he was an assistant in masonry work and that he had committed petty felonies only and not definitely the cases shown in his conviction records and the police had taken him whenever they could not fix an accused.
I perused his conviction records and most of the offenses for which he was punished were motorcycle thefts. From his looks I could guess that he did not know even to start a motorcycle. I confronted him why he had committed thefts of motorcycles. He replied that he had not committed theft of any motorcycle but whenever motorcycles were recovered in series he was fixed as the thief. I sent for the Inspector who booked him, to know from him whether the allegation of the thief was true. The Inspector stood in silence for long and muttered that it was true and I told him that he has children and wished that he sinned no more... ... ....
இதுபோன்றுஅப்பாவிகளுக்கு இந்தியாவில் பலகாலமாக இழைக்கப்பட்டுவரும் அநீதியைக் கண்ட மேலை நாடுகள் “புகார்பொய்யாகஇருந்தாலும்எந்தவிதஆதாரமுமின்றிஅப்பாவிகளைகைதுசெய்யும்நடைமுறைஇந்தியாவில்இருப்பதாக”இந்தியாவிற்குசெல்லநினைக்கும்தங்களதுகுடிமக்களைஎச்சரிக்கைசெய்துவருகின்றன!
The University of California Education Abroad Program
“Since the police may arrest anyone who is accused of committing a crime(even if the allegation is frivolous in nature), the Indian criminal justice system is often used to escalate personal disagreements into criminal charges. This practice has been increasingly exploited by dissatisfied business partners, contractors, estranged spouses, or other persons with whom the U.S. citizen has a disagreement, occasionally resulting in the jailing of U.S. citizens pending resolution of their disputes”
குற்ற வழக்குகளில் நிரபராதிகளை சிக்கவைத்து துன்புறுத்தும் கொடுஞ்செயல் இப்போது சர்வ சாதாரணமாக பொய் வரதட்சணை வழக்குகளில் மிகவும் அதிகமாக நடந்துகொண்டிருக்கிறது. ஏனென்றால் வரதட்சணை தடுப்புச் சட்டங்களை தவறாகப் பயன்படுத்தும் குற்றவாளிகளுக்குத் துணையாக பொய் வழக்குகளை உருவாக்கி அப்பாவிகளை துன்புறுத்தினால் அதிக பணம் கிடைக்கிறதாம்!மேலும் பொய்வரதட்சணைவழக்குகள் என்பதுஇந்தியாவில்பலருக்கும்லாபம்தரும்தொழிலாகஇருப்பதாகடில்லிஉயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது.
IN THE HIGH COURT OF DELHI AT NEW DELHI
Date of Order: August 06, 2010
Crl. M.C. 722 of 2009
Amit Sharma ...PetitionerVersus State & Ors. ...Respondents
4. It is surprising that such FIRs are registered by the police when neither complainant lives in Delhi nor the accused persons live in Delhi nor any part of alleged offence had taken place in Delhi. … … … I consider that registration of this FIR is a sordid story of working culture of Delhi police. It is this police which refuses to register FIRs in case of robberies, thefts and other heinous offences which take place on the roads of Delhi and when the complainant dare comes to police station for registration of FIR, he is made to run from one police station to another on the issue of jurisdiction itself, while the FIRs are registered when nothing happened in India and no investigation can be done by the police in India. Why such FIRs are registered is obvious. It seems registration of FIRs has been made a profitable business by some police officials.
பொய் வரதட்சணை வழக்குகள் லாபம் தரும் தொழிலாக இருப்பதால் கடமையை மறந்து நிரபராதிகளை பொய் வரதட்சணை குற்றவழக்குகளில் குற்றவாளியாக சித்தரித்து நீதிமன்றங்களுக்கு குற்ற அறிக்கை அனுப்பும் பல சம்பவங்கள் இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இதனால் கடைசியில் ஏழை எளிய அப்பாவி நிரபராதிகள்தான் பாதிக்கப்படுகிறார்கள். இதுபோன்ற மனித உரிமை மீறல்கள் நடக்காமல் இருக்கவேண்டுமென்றால் காவல் தனது கடமை தவறினாலும் நீதித்துறை தலைநிமிர்ந்து நின்று அப்பாவிகளைக் காக்கவேண்டும்.
“தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு. ”
என்றதிருவள்ளுவரின் கூற்றையே இப்போதுபொய்வரதட்சணை வழக்குகள் பொய்யாக்கிவிட்டன. தீயினால் சுட்ட வடுவும் மறைந்துவிடும், நாவிலிருந்து வந்த கடுஞ்சொற்களால் ஏற்பட்ட வேதனைகள் கூட மறைந்துவிடும். ஆனால் நிரபராதியை பொய் வழக்கில் குற்றவாளியாக சிக்கவைத்து நீதிமன்றத்தில் அலையவிட்டு கடைசியில் நிரபராதி என்று விடுதலை செய்தாலும் அந்த நிரபராதி அடைந்த இன்னல்கள் என்றுமே ஆறாத ரணமாகத்தான் இருக்கும். அப்பாவிகளின் இந்த வேதனையை யாராலும் துடைக்க முடியாது என்று இந்திய உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ஒரு பொய் வரதட்சணை வழக்கில் அளித்த தீர்ப்பில் ஒழுங்கற்ற புலன் விசாரணை மூலம் நிரபராதிகளுக்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டு வேதனைப் பட்டிருக்கிறது.
Supreme Court of India
Preeti Gupta & Another Vs. State of Jharkhand & Another,
Crl. Appeal No. 1512/2010, Dt: 23 August 2010
“The criminal trials lead to immense sufferings for all concerned.Even ultimate acquittal in the trial may also not be able to wipe out the deep scars of suffering of ignominy.Unfortunately a large number of these complaints have not only flooded the courts but also have led to enormous social unrest affecting peace, harmony and happiness of the society..”
அதனால் பொய் வரதட்சணை வழக்குகள் எந்தவித விசாரணையுமின்றி காவல்துறையால் குப்பைகளாக நீதிமன்றத்தில் கொட்டப்படும்போது நிரபராதிகளை தேவையற்ற குற்ற வழக்குகளில் சிக்கவைத்து துன்புறுத்தாமல் பாதுகாக்க நீதிமன்றங்களால் மட்டும்தான் முடியும். மனமிருந்தால் மார்க்கமுண்டு! காவலுக்கும், நீதிக்கும்மனசாட்சியிருந்தால் மட்டுமே அப்பாவிகளுக்கும்நீதியுண்டு!!