Sunday, June 26, 2011

குடும்பங்களை சிதைத்து மகிழும் இந்திய சட்டங்கள்

சட்டங்கள் பொதுவாக அப்பாவிகளையும், நல்லவர்களையும் பாதுகாப்பதற்காகத்தான் உருவாக்கப்படுகின்றன. ஆனால் இந்தியாவில் பல விசித்திரமான சட்டங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் எனப்படும் வரதட்சணை தடுப்புச் சட்டங்கள்.

குடும்பங்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படும் வரதட்சணை தடுப்புச் சட்டங்களும், பெண்கள் பாதுகாப்புச் சட்டங்களும் தெளிவற்ற முறையிலும் குற்றவாளிகளின் கையில் ஆயுதமாக பயன்படுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் குறிப்பாக IPC498A, வரதட்சணை தடுப்புச் சட்டம், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இந்த தவறான சட்டங்களைப் பற்றியும் அவற்றால் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் ஆபத்துக்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள பின்வரும் பதிவுதளங்களுக்குச் செல்லுங்கள்.


இந்த சட்டங்களை உண்மையாக பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தியதைவிட தவறான நோக்கத்திற்காக பல பெண்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த சட்டங்கள் துஷ்டர்களின் கையில் கிடைத்த அணுஆயுதம் போல் மாறி இப்போது பல குடும்பங்களை அழித்துக்கொண்டிருக்கின்றன.

இந்த எழுத்துக்களை உங்களால் நம்பமுடியவில்லையென்றால் பின்வரும் வீடியோவைப் பாருங்கள். அது பல கோடி ஆதாரங்களுக்குச் சமம்.






இவையெல்லாம் தெரிந்தும் அரசாங்கம் கண்டும் காணாதது போல கண்மூடிக்கொண்டிருக்கிறதா என்று தெரியவில்லை. இதுவரை இதுபோல பொய்வழக்குகளில் சிக்கி சிதைந்துகொண்டிருக்கும் அப்பாவிகளைப் பாதுகாக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தவறாக இயற்றப்பட்டுள்ள இந்த சட்டங்களைப் பயன்படுத்தி பொய் வரதட்சணை வழக்குகள் மூலம் அப்பாவிகளை துன்புறுத்தி தினந்தோறும் பல குடும்பங்களை சிதைத்து மகிழ்வது தர்மமா? அதர்மமா?

No comments: