Saturday, October 13, 2012

அநீதி தலைவிரித்தாடும் இந்திய நீதித்துறை!

நேற்றைய செய்தியில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தமிழகத்திலுள்ள கீழ்நிலை நீதிமன்றங்களில் நிலவிவரும் ஊழல் பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார்.  இது ஆச்சரியப்படும் விஷயம் அல்ல.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் தர்மம் மீண்டும் வெல்லும் என்று ஒரு வாக்கு இருக்கிறது. இதனை நம்பி அதர்மத்தின் பிடியில் இருக்கும் தர்மத்தை காப்பாற்ற வாய்மையே வெல்லும் என்ற நம்பிக்கையுடன் பல அப்பாவி இந்தியர்கள் நீதிமன்றங்களை நாடுகிறார்கள்.  ஆனால் அந்த நீதிமன்றங்களில் அதர்மத்தைவிட மிகுந்த பேராபத்து காத்துக்கொண்டிருக்கிறது என்று இந்த பாவப்பட்ட  அப்பாவிகளுக்குத் தெரிவதில்லை.

இந்திய நீதித்துறையில் குறிப்பாக கீழ்நிலை நீதிமன்றங்களில் ஊழலும், அதர்மமும் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது என்று “Transparency International" என்ற சர்வதேச நிறுவனம் ஒரு புள்ளிவிபரம் கொடுத்திருக்கிறது என்று தமிழக காவல்துறை தனது மாத இதழில் குறிப்பிட்டிருக்கிறது.

"Transparency International, in its Global Corruption Report 2007 has revealed recently that an amount of Rs 2,630 crores was paid in bribes to the lower judiciary in India during 2006!" - Report from Tamilnadu police journal "Criminal Investigation Review. 2007. Volume V (IV)
இது போதாதென்று இந்திய உச்ச நீதிமன்றம் இந்தியாவில் தனது கட்டுப்பாட்டில் இயங்கும் கீழ்நிலை நீதிமன்றங்களை இந்திய கிராமப்புறங்களில் இயங்கும் தரமற்ற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஒப்பிட்டு  நீதி என்பது அப்பாவி ஏழை இந்தியர்களுக்கு எட்டாத கனி என்று கொஞ்சமும் கூசாமல் வர்ணனை செய்திருக்கிறது.

NEW DELHI: Supreme Court on Thursday sounded the grim warning that the criminal justice system had been subverted, with witnesses being manipulated and trials being hijacked with judges and lawyers remaining "handicapped witnesses".

Making the chilling observation, which to many only confirmed the widely held perception of the erosion of the system, a Bench comprising Justices B N Agrawal, G S Singhvi and Aftab Alam also said that the lower judiciary had decayed.

"The courts of magistrate and munsif have ceased to be an option for the common man," the Bench said and compared the lower courts to ill-equipped and ill-staffed public health centres (PHCs) in rural areas.

"Only those people go there who have no other option," said the Bench as an apparent indicator of the low measure of public faith in these courts, which are the first points of dispute settlement for the masses.

The comment, perhaps the sharpest-ever from the apex court on the health of the country's judicial administration system..........

இந்திய நீதித்துறை செயல்படும் விதம் பற்றி  உச்ச நீதிமன்றத்தின் தன்னிலை விளக்கம் எவ்வளவு உண்மை என்று பின்வரும் பல செய்திகள் மூலம் அறிந்துகொள்ளலாம்.

புது தில்லி, ஜூலை 18: போலீஸ் பதிவேட்டில் ரௌடிகள் பட்டியலில் இடம்பெற்றிருந்தவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டது தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்ற நிர்வாகத்தை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.

தலைமறைவுக் குற்றவாளி நீதிபதியாக பணியாற்றிக் கொண்டிருந்த அதிசயம்!
Indian Express Fri May 21 2010
Bhopal : A man who was declared an absconder by a court in Indore worked as a judge in a superior court in the same city for years before his past caught up with him. 

புதுடில்லி: வட மாநில நீதிபதிகள் மூன்று பேர், ஊழியர்களின் பி.எப்., பணத்திலிருந்து வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் குவித்திருப்பது, சமீபத்திய சி.பி.ஐ., விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஐதராபாத்:ஆந்திராவில் வாரங்கல் காந்திய பல்கலைக் கழகத்தில் முதுகலை சட்டப் படிப்பு (மாஸ்டர் ஆப் லா) தேர்வில் காப்பியடித்த புகாரின் பேரில், மேலும் இரு நீதிபதிகள், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.இதே போன்று தேர்வில் காப்பியடித்த குற்றத்தின் பேரில், கடந்த 25ம் தேதி ஐந்து நீதிபதிகளை மாநில ஐகோர்ட் தலைமை நீதிபதி நிஷார் அகமது சுக்ரூ, சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.தற்போது இதே புகாரின் பேரில் வாரங்கல் சீனியர் சிவில் ஜட்ஜ் ரஜாக் உஜ்மா மற்றும் அவரது மனைவி, வாரங்கல் மாவட்ட லீகல் சர்வீஸ் அத்தாரிடி செயலர் பிரேமா ராஜேஸ்வரி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.


இந்திய அளவில் நீதிமன்றங்களின் தரம் இப்படி இருக்கையில் தமிழகத்தைப் பற்றி தமிழக தலைமை நீதிபதியின் கருத்தைப் படித்துப் பாருங்கள்.

வெள்ளிக்கிழமை, அக்டோபர் 12, 2012 One India Tamil


சென்னை: நீதிபதிகள் லஞ்ச ஊழலுக்கு அப்பாற்றபட்டவர்களாக இருக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 900 நீதிபதிகளில் 500 பேர்மீது புகார் வந்துள்ளதாகவும் அவர் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 167 பேர் சிவில் நீதிபதிகள் வியாழக்கிழமையன்று பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு எம்.ஒய். இக்பால் பதவி பிரமாணம் செய்து வைத்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது :

நீதிபதிகள் விமர்சனத்திற்கு ஆளாகக் கூடாது. உங்களுக்கு எதிராக ஊழல் புகார் சுமத்தப்பட்டால், உடனே பதவி விலகிவிடுங்கள். தற்போது நீதிபதிகள் மீதும் ஊழல் புகார் குறித்த தவறான கண்ணோட்டம் எழுந்துள்ளது. அதற்கு நீங்கள் இடம் கொடுக்காதீர்கள். தமிழ்நாட்டில் 900 நீதிபதிகள் உள்ளனர். இவர்களுக்கு எதிராக 500 புகார் மனுக்கள் உள்ளன.

ஊழல் செய்யும் அரசு ஊழியர்களை கண்காணிக்க ஊழல் கண்காணிப்பு கமிட்டி இருப்பதுபோல், நீதிபதிகளையும் கண்காணிக்க எனது தலைமையில் கண்காணிப்பு கமிட்டி உள்ளது. நீதிபதிகளுக்கு எதிரான மொட்டை புகார்கள் மீது கவனம் செலுத்த மாட்டோம். உங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தால் தீவிரமாக கண்காணிக்கப்படுவீர்கள்.

தமிழ்நாட்டில் உள்ள நீதிபதிகள் ஊழலுக்கு அடிபணியாதவர்கள் என்ற கருத்துக்கு உதாரணமாக திகழ வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மூத்த நீதிபதிகளுக்கு மதிப்பு கொடுங்கள். நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஓத்துழைப்பு கொடுங்கள். நீதிமன்ற அலுவல் நேரத்தில் ஒழுக்கம், கண்ணியத்தை கடைப்பிடியுங்கள். இவ்வாறு தலைமை நீதிபதி கூறினார்.

நீதிபதி கருத்தினால் சலசலப்பு

இன்றைக்கு ஏழை எளிய மக்கள் நீதிபதிகளை கடவுளுக்கு சமமாக மதிக்கின்றனர். நியாயம் வழங்கும் நீதிபதிகளே இன்றைக்கு லஞ்ச ஊழல் புகாரில் சிக்கியுள்ளதாக தலைமை நீதிபதி ஒருவரே கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்துக்கூறியுள்ள உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர், தலைமை நீதிபதி இத்தகைய பேச்சினை பொது இடத்தில் பேசுவதை தவிர்த்திருக்கலாம் என்றார். நீதிபதிகள் மீது புகார் இருப்பதாக கூறியுள்ளதால் பொதுமக்களுக்கு நீதித்துறையின் மீது ஐயம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.

தலைமை நீதிபதியின் கருத்து எவ்வளவு உண்மை என்பதை தெரிந்துகொள்ள சில சான்றுகள் பின்வரும் செய்திகளில் உள்ளன.  "ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்"  என்ற உண்மையை அறிந்தவர்கள் இந்திய நீதித்துறையின் தரத்தை இப்போது நன்றாக அறிந்துகொள்வார்கள்.
ஆகஸ்ட் 08,2010 தினமலர்
சென்னை; லஞ்ச குற்றச்சாட்டின் பேரில், பெண் மாஜிஸ்திரேட்டை பணி நீக்கம் செய்தது சரிதான் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கலில் முதல் வகுப்பு ஜுடிசியல் மாஜிஸ்திரேட் ஆக கலாராணி என்பவர் நியமிக்கப்பட்டார்.ப்போது வரதட்சணை கொடுமை வழக்கு ஒன்றை விசாரித்தார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்தார். இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனை விதிப்பதற்காக, புகார் கொடுத்தவரின் தந்தையிடம் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக மாஜிஸ்திரேட் கலாராணிக்கு எதிராக புகார் கொடுக்கப்பட்டது.
 பெரியகுளம் சப்-கோர்ட் : நீதிபதி "சஸ்பெண்ட்"
ஆகஸ்ட் 05,2010 தினமலர்

பெரியகுளம் : பெரியகுளம் சப்-கோர்ட் நீதிபதியாக பணிபுரிந்த மோகன் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை மாவட்ட நீதிபதி சிவானந்த ஜோதி வழங்கினார். தேனி மாவட்டம் பெரியகுளம் சப்-கோர்ட் நீதிபதி மோகன், முன்னதாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் குற்றவியல் நடுவராக பணியாற்றியுள்ளார். அங்கு கூறப்பட்ட புகார்களின் அடிப்படையில் சென்னை ஐகோர்ட் விசாரித்து வந்தது. இந்நிலையில், நிர்வாக நடவடிக்கையாக அவரை சஸ்பெண்ட் செய்து சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் விமலா உத்தரவிட்டார். மாவட்ட முதன்மை நீதிபதி சிவானந்த ஜோதி மூலம் இதற்கான உத்தரவு மோகனுக்கு நேரில் வழங்கப்பட்டது. நீதிபதி மோகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால், பெரியகுளம் சப்-கோர்ட் நீதிபதி பொறுப்பை தேனி சப்-கோர்ட் நீதிபதி முத்து சாரதா கவனிக்கவுள்ளார்.
பெண் ஊழியரை புரோக்கராக நீதிபதி வைத்திருந்தாரா?
DATED: 5.1.2010 

Based on the complaint, dated 19.4.2005, sent by one T.Chandran of Tirunelveli to the Registry of the High Court, to the effect that the petitioner, while working as I Additional Sub Judge, Tirunelveli had some intimacy with Tmt.Jayanthi, Head Clerk, Fast Track Court No.I, Tirunelveli, thus facilitating her to collect money from the parties in respect of the proceedings pending before the petitioner assuring favourable judgments, a discreet enquiry was conducted by the Registrar (Vigilance) High Court, Madras against the petitioner, then I Additional Sub Judge, Tirunelveli and now a District Judge, working as Sessions Judge, Mahila Court, Chengalpattu and others.
அக்டோபர் 07,2012 தினமலர்

 ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி கோவிந்தராஜூலு "சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இவர் மீதான பல புகார்கள் குறித்து, மதுரை ஐகோர்ட் பதிவாளர் உதயன் விசாரணை நடத்தி வழங்கிய அறிக்கைபடி, சென்னை ஐகோர்ட் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள், ராமநாதபுரம் கோர்ட்டில், மாவட்ட முதன்மை நீதிபதி கோவிந்தராஜூலுவிடம், "சஸ்பெண்ட்' உத்தரவை வழங்க வந்தனர். இவர் விடுமுறையில் இருந்ததால், "சஸ்பெண்ட்' உத்தரவு நகலை, நீதிபதியின் வீட்டின் கதவில் ஒட்டினர். மேலும் ஒரு நகலை, ராமநாதபுரம் கூடுதல் அமர்வு நீதிபதி சிவசுப்பிரமணியத்திடம் வழங்கினர்.

 இதுபோன்று அநீதி தலைவிரித்தாடும் இந்திய நீதித்துறையில் எந்த அப்பாவி இந்தியனுக்காவது நீதி கிடைக்குமா?

நீதித்துறை இப்படி தறிகெட்டு லஞ்ச ஊழலில் திளைத்துக் கொண்டிருப்பதற்கு காரணம் என்ன? 

இந்தியாவில் குடிமைப்பணி, காவல் பணி செய்ய அகில இந்திய அளவில் தகுதித் தேர்வின் (All India Civil Services Exam) அடிப்படையில் அதிகாரிகளை நியமிக்கிறார்கள்.  ஆனால் நீதித்துறைக்கு மட்டும் எந்தவித கேள்வி முறையும் இன்றி நீதிபதிகள் நியமிக்கப் படுகிறார்கள்.  இதுபோன்ற நீதிபதிகளை உருவாக்கும் சட்டக்கல்லூரிகளின் தரம் பற்றி அனைவருக்கும் நன்கு தெரியும்.  இதுபோன்ற இடங்களில் உருவாகும் உறுப்பினர்கள்தான் எந்தவித தர நிர்ணயமும் இன்றி வழக்காடுபவர், மாஜிஸ்ட்ரேட், நீதிபதி என்று பல நிலைகளில் இருந்துகொண்டு நாட்டின் முக்கியமான நீதித்துறையை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  அதன் தாக்கம் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது என்பதன் சிறு தொகுப்புதான் மேலுள்ள செய்திகள்.  இந்த சூழலில் எந்த அப்பாவி இந்தியனுக்காவது சரியான நீதி கிடைக்குமா?

Times of India Jul 21, 2012

NEW DELHI: Aiming to infuse young talents to higher judiciary, the government has prepared a Cabinet note to introduce the Indian Judicial Service (IJS) — an all-India service on the lines of the Indian Administrative Service (IAS) and Indian Police Service (IPS). The proposal is likely to be brought before the Union Cabinet next week for its approval.

The Supreme Court, which had initiated the process of consultation with all HCs a few years ago, has been in favour of creating IJS due to large number of pending cases in different courts and also the prevailing trend where many bright law graduates prefer corporate law firms to judiciary. Conducive environment, good remunerative package and better career progression — like in the IAS and the IPS — may attract talented professionals to enter the judicial service.


இந்தியாவைப் பொறுத்தவரை 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெறும் முதல் தர மாணவர்கள் 12ம் வகுப்பில் முதல் இரண்டு பிரிவுகளை (கணிதம், உயிரியல்) தேர்ந்தெடுக்கிறார்கள். பிறகு 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெறும் இந்த இரண்டு பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் பொறியியல், மருத்துவம் என்ற இரு துறைகளுக்குச் சென்று விடுகிறார்கள்.

அடுத்த கட்ட 10ம் வகுப்பு மாணவர்கள் தங்களின் தர வரிசைப்படி தங்களின் மதிப்பெண்ணிற்கேற்ப 12ம் வகுப்பில் வணிகவியல், இலக்கியம், தொழிற்கல்வி, கடைசியில் வரலாறு என்ற பிரிவுகளில் சேர்ந்துவிடுகிறார்கள்.  பிறகு கல்லூரியில் இந்த இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை மாணவர்கள் முறையே B.Com., B.A. (Literature), கடைசியில் B.A. (History)  என்ற பிரிவுகளில் சேர்ந்துவிடுகிறார்கள்.  அதற்குப் பிறகு  மூன்றாவது வகை மாணவர்கள் சட்டக் கல்லூரிக்குச் சென்று  B.A., B.L.,  என்ற தகுதியுடன் நீதிமன்றங்களுக்குள் நுழைந்து நாட்டின் நீதித்துறையின் தலையெழுத்தை நிர்ணயிக்கிறார்கள்.  இப்போது நாட்டின் நீதியின் தரம் எப்படி இருக்கும் என்று உங்களுக்கு புரிந்திருக்கும். மேலுள்ள செய்திகள் ஏன் உருவாகியிருக்கின்றன என்ற ரகசியமும் புரிந்திருக்கும்.

No comments: