Wednesday, December 28, 2011

வந்தார் தர்மயுத்தத்தில் வென்றார்!

துடிப்பான பொறியியல் வல்லுனராக மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிந்த திரு. கலைசெல்வன் 1997ல் இந்தியாவில் நடந்த திருமணத்தில் தவறான நபரால் வஞ்சிக்கப்பட்டு இந்திய உச்ச நீதிமன்றத்தால் “அப்பாவிகளுக்கெதிரான சட்ட தீவிரவாதம்” என்று அழைக்கப்படும் பொய் வரதட்சணை வழக்கு மூலம் தாக்கப்பட்டார். துணிவுமிக்க இந்த இளைஞர் அநீதியைக் கண்டு அஞ்சி நடுங்காமல் இந்த வன்முறையை எதிர்த்து போராட கொஞ்சமும் தயங்காமல் இந்தியாவிற்கு வந்தார்.


இந்தியாவிற்கு வந்து நேரில் பார்த்தபோதுதான் இந்திய மண்ணில் காவல்- நீதித்துறைகளின் துணையோடு இந்த பொய் வரதட்சணை வழக்கு அராஜகம் அப்பாவிகளுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள உண்மை நிலையை உணர்ந்து தமிழ்நாட்டில் இதுபோன்று இன்னலுறும் அப்பாவிகளை காக்க இந்தியக் குடும்ப பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பு உருவாக உறுதுணையாகயும், அடித்தளமாகவும் செயல்பட்டு தனக்கெதிரான அநீதியை எதிர்த்து போராடும் அதே வேளையில் பொய் வழக்கில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்த பல ஆயிரக்கணக்கான அப்பாவிகளுக்கு வழிகாட்டியாகவும் செயல்பட்டார்.







1998 முதல் அவருக்கெதிராக காவல் மற்றும் நீதித்துறையின் ஒத்துழைப்போடு நடந்த “சட்ட தீவிரவாதத்தை” கொஞ்சமும் தளராமல் எதிர்த்து போராடிய இவருக்கு இன்று எல்லாவித பொய் வழக்குகளிலிருந்தும் விடுதலை கிடைத்து விட்டது.

498அ X தர்மயுத்தத்திற்கு முன்னோடியாக இவரது வெற்றி அனைவருக்கும் ஒரு நல்ல விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் என்று வாழ்த்துவோம்.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் மீண்டும் தர்மம் மட்டுமே வெல்லும்!!