தமிழக நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகள் 20 லட்சம்: ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் எண்ணிக்கை தினமலா் 18/10/2014வழக்கில் சிக்கியவா்கள் பல ஆண்டுகள் வக்கீலுக்கு பணம் கொடுத்தும் நீதிமன்றத்தில் லஞ்சம் கொடுத்தும் நீதி கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருக்கிறாா்கள். குறிப்பாக கீழ்நிலை நீதிமன்றங்கள் பல கோடி கணக்கில் லஞ்ச ஊழல் நடக்கும் இடமாக இருக்கின்றன என்று சா்வதேச புள்ளி விபரம் கூறுவதாக தமிழக கால்துறையே குறிப்பிட்டிருக்கிறது.
"Transparency International, in its Global Corruption Report 2007 has revealed recently that an amount of Rs 2,630 crores was paid in bribes to the lower judiciary in India during 2006!" - Report from Tamilnadu police journal "Criminal Investigation Review. 2007. Volume V (IV)இந்தச் சூழலில் பொய் வரதட்சணை வழக்கில் சிக்கியவா்களின் கதி என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள்.
பொய் வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டவருக்கு தக்கசமயத்தில் சரியான நீதி வழங்கப்படாமல் அவர்கள் உடலாலும், மனதாலும் வேதனை அடைந்து, துன்புறுத்தப்பட்டு பிறகு பல ஆண்டுகள் கழித்து வழங்கப்படும் நீதி அந்த அப்பாவிகளுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதியாகத்தான் இருக்கும் (Justice Delayed = Justice Denied).
பல ஆயிரம் குற்றவாளிகளுக்கு தண்டனை தராமல் விடுவதைவிட பொய்வழக்கில் சிக்கவைக்கப்பட்ட ஒரே ஒரு அப்பாவிக்குக்கூட தக்க சமயத்தில் நீதி வழங்காமல் இருப்பதுதான் மிகப்பெரிய அநீதி என்பதில் கொஞ்சமும் சந்தேகமே இல்லை. இந்த அவலத்தை முன்னாள் இந்தியத் தலைமை நீதிபதி திரு.ஸபர்வால் அவர்கள் தனது உரையில் வேதனையுடன் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
JUSTICE SOBHAG MAL JAIN MEMORIAL LECTURE ON DELAYED JUSTICE DELIVERED BY HON’BLE SHRI Y.K. SABHARWAL, CHIEF JUSTICE OF INDIA ON TUESDAY, THE 25thJULY, 2006
I will conclude by referring to the observation made by Justice Warran Burger, former Chief Justice of the American Supreme Court observed: “…… The notion – that ordinary people want black-robed judges, well dressed lawyers, fine paneled courtrooms as the setting to resolve their disputes, is not correct. People with legal problems, like people with pain, want relief and they want it as quickly and inexpensively, as possible.”
வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டு
நீதிமன்றத்திற்கு அலைக்கழிக்கப்படும் அப்பாவி பொதுமக்கள் யாரும் அழகான நீதிமன்ற கட்டிடங்களையும், நேர்த்தியான கருப்பு வெள்ளை சீருடையில் அமர்ந்திருக்கும்
நீதிபதியையும், வழக்கறிஞர்களையும் கண்டு
மகிழ்வதற்காக நீதிமன்றத்திற்கு விரும்பி வருவதில்லை.
வழக்குகளில்
சிக்கியிருக்கும் வயதான பெரியோர்களும், உடல்நலக்குறைவு உடையவர்களும், பெண்களும், இளைஞர்களும் பல ஆண்டுகளாக
நீதிமன்றத்தில்கூட
தங்களுக்கு
(விரைவாக) நீதிகிடைக்காமல் சொல்லமுடியாத மனவேதனைகளுடன்
தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம்
தங்களுக்குக் கிடைக்கவேண்டிய நீதி விரைவாகவும், நேர்மையாகவும், லஞ்ச ஊழல் தலையீடு இல்லாமலும் கிடைக்கவேண்டும் என்பது மட்டுமே.
தாமதிக்கப்பட்ட நீதியும் மறுக்கப்பட்ட நீதிதானே?இதை படித்துவிட்டு பின்வரும் செய்தியை படித்தால் உங்களுக்கு ஒரு தெளிவான உண்மை புரியும்.
அக்டோபர் 20,2014 தினமலா்சாத்தூர் : சாத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட விசாரணைக் கைதி, உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த மனிதக் கழிவை மாஜிஸ்திரேட் மீது வீசினார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே, மேலத்தாயில்பட்டியைச் சேர்ந்தவர் பாக்யராஜ், 38. இவர், விவசாயக் கிணற்றில் மோட்டார் பம்ப் திருடிய வழக்கில் விருதுநகர் சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கு தொடர்பாக,நேற்று காலை, சாத்தூர் ஜே.எம்.2 கோர்ட்டில், மாஜிஸ்திரேட் மாரியப்பன் முன், பாக்யராஜை போலீசார் ஆஜர்படுத்தினர். எஸ்.ஐ., சதீஷ்பிரபு கோர்ட்டில் ஆஜராகாததால், வழக்கு விசாரணையை, 15 நாட்களுக்கு ஒத்திவைப்பதாகவும், பாக்யராஜை மீண்டும் சிறையில் வைக்கவும் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
அப்போது, பாக்யராஜ், ''என்னை உறவினர்கள் ஜாமினில் எடுக்கவில்லை. எனக்காக வாதாட வழக்கறிஞரும் இல்லை. வழக்கை உடனடியாக விசாரித்து முடிக்க வேண்டும்,'' என, மாஜிஸ்திரேட்டிடம் வலியுறுத்தினார். இதற்கு மாஜிஸ்திரேட், ''இலவச சட்ட உதவி முகாமை அணுகி வழக்கறிஞர் ஏற்பாடு செய்து கொள்ளலாம்,'' என்றார்.
இதனிடையே, உள்ளாடையில், பிளாஸ்டிக் பையில் மறைத்து வைத்திருந்த மனிதக் கழிவை மாஜிஸ்திரேட்டை நோக்கி, பாக்யராஜ் வீசினார். இது, மேஜை மற்றும் மாஜிஸ்திரேட் உடையில் பட்டது. பாக்யராஜை, போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று, விசாரிக்கின்றனர். கைதியை கோர்ட்டுக்கு அழைத்து வரும்போது, முழுமையாக சோதனையிட வேண்டியது போலீசாரின் கடமை. போலீசார், இதை பொருட்படுத்துவதில்லை. கைதிகள் வேறு பொருட்களை வைத்துள்ளனரா, என்பதை கண்டறிய வேண்டும். போலீசாரின் அஜாக்கிரதையால், இதுபோன்ற சம்பவங்கள் நடந்து விடுகின்றன.