பதில்: தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். ஆனால் தர்மம் மட்டுமே வெல்லும்.
தற்கொலைக்கு தூண்டினாரா கிரகலட்சுமி? வழக்கிலிருந்து விடுதலை கோரிய மனு தள்ளுபடி
சென்னை : தற்கொலைக்கு தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, கிரகலட்சுமி உள்ளிட்ட ஐந்து பேர் தாக்கல் செய்த மனுவை, சென்னை மகளிர் கோர்ட் தள்ளுபடி செய்தது.
நடிகர் பிரசாந்துக்கும், தி.நகரைச் சேர்ந்த கிரகலட்சுமி என்பவருக்கும் திருமணம் நடந்தது. சென்னை குடும்ப நல கோர்ட்டில், நடிகர் பிரசாந்த் மனு தாக்கல் செய்து, கிரகலட்சுமியுடன் நடந்த திருமணம் செல்லாது என உத்தரவு பெற்றார். (மேலும் நடிகர் பிரசாந்த் மீது IPC498A பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட வரதட்சணை வழக்கும் பொய்யான வழக்கு என்று தள்ளுபடி செய்யப்பட்டது).
கிரகலட்சுமியின் சகோதரர் பொன்குமார். அவருக்கும் அபிராமி என்பவருக்கும், 2006ம் ஆண்டு திருமணம் நடந்தது. அபிராமியிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக, கிரகலட்சுமியின் குடும்பத்தினர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. 2010ம் ஆண்டு, குளியலறையில் தூக்குப் போட்டு அபிராமி தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து, தற்கொலைக்கு தூண்டியதாக கிரகலட்சுமி, அவரது தாயார் சிவகாமசுந்தரி, சகோதரர் உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணை, சென்னை மகளிர் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, சிவகாமசுந்தரி, கிரகலட்சுமி உள்ளிட்ட ஐந்து பேர், மகளிர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி சேதுமாதவன் உத்தரவிட்டார்.